வயிறு வீக்கம் அல்லது உப்புசம் என்பது பலருக்கும் வரக்கூடிய ஓர் அசௌகரியம். இது இரவு உணவுக்குப் பின் ஸ்னாக்ஸ் சாப்பிடுவது, டீ அதிகம் அருந்துவது அல்லது ஸ்ட்ரெஸ் போன்ற பல கரணங்களால் உண்டாகக் கூடியது. இதற்கு உடனடியாக மருத்துவ உதவியை நாடாமல் நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யலாம். என்னென்ன ஸ்பைஸஸ் வயிற்றில் கோளாறு ஏதும் உண்டு பண்ணாமல் சிறப்பான செரிமானத்துக்கு உதவும் என்பதை இப்போது பார்க்கலாம்.
சிறப்பான செரிமானத்துக்கு உதவுவதில் இதை ஹீரோ எனலாம். சிறிதளவு ஓமத்தை வெதுவெதுப்பான நீரில் போட்டு குடிப்பது அல்லது சப்பாத்தி மற்றும் பூரி மாவில் கலந்து சமைத்து உண்பது சிறந்த பலன் தரும். வயிற்றுக்கு இதம் அளித்து, வாய்வை வெளியேற்றி, கடினமான உணவுப் பொருட்களை உடைத்து விரைவாக செரிமானம் நடைப்பெற, என பல வழிகளில் ஓமம் உதவி புரியும்.
விருந்து சாப்பாடு போன்ற ஹெவி மீல்ஸ் உட்கொண்ட பின் அரை டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று தின்பது, வயிற்றை அமைதிப் படுத்தி, உணவு சிறந்த முறையில் செரிமானமாக உதவி புரியும்.
அளவுக்கு அதிகமாக உணவு உட்கொண்டு விட்டால், ஒரு டீஸ்பூன் சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, பின் நீரை வடிகட்டி சிறிது ஆறியதும் குடித்து விடலாம். ஜீரா வாட்டர் வயிற்று மந்தத்தைப் போக்கி இரைப்பை குடல் இயக்க வெப்பநிலை சிறிது அதிகரிக்கவும் செரிமானம் சீராகவும் உதவி புரியும்.
இது வயிற்றுப் பிடிப்பு மற்றும் வாய்வு போன்றவற்றை நீக்கும். புரதம் நிறைந்த சன்னா, ராஜ்மா மற்றும் பருப்பு வகை உணவுகளை பெருங்காயம் சேர்த்து சமைத்து உட்கொண்டால் வயிறு வீக்கம் உண்டாகாமல் செரிமானம் சுலபமாக நடைபெறும்.
கார சாரமான, அதிக சக்தி அளிக்கக்கூடிய மூலிகைப் பொருள் இஞ்சி. சாப்பாட்டிற்கு முன் சிறிது லெமன் ஜூஸுடன் சிறு துண்டு இஞ்சி நசுக்கிப் போட்டு, பிளாக் சால்ட் கலந்து குடித்தால் வயிறு உணவை ஏற்க தயாராகிவிடும். உணவுக்குப் பின் இஞ்சி டீ குடிப்பது, வீக்கத்தைக் குறைக்கவும், விரைவான செரிமானத்திற்கும் உதவும்.
புதினா வயிற்று சூடு, பிடிப்பு மற்றும் அசௌகரியங்களை நீக்கி வயிற்றுக்கு குளிர்ச்சி தரும். இரைப்பை குடல் இயக்கப் பாதையை தளர்வுறச் செய்து ஜீரணம் சிறப்பாக நடைபெற உதவும். புதினா, சீரகம், பிளாக் சால்ட் ஆகியவற்றை மோரில் கலந்து குடிக்க, ஜீரணம் சிறப்பாவதுடன், அசிடிட்டி மற்றும் வீக்கங்களும் குறையும்.
பெருங்காயத்தையும் ஓமத்தையும் நீரில் போட்டு சில நிமிடம் கொதிக்க வைத்து அந்த நீரைக் குடிப்பது,
சீரகத்தையும் பெருஞ்சீரகத்தையும் ஒரு ஒரு ஸ்பூன் எடுத்து கொதிக்கும் நீரில் சில நிமிடம் போட்டு அந்த நீரை வெது வெதுப்பாக குடிப்பது,
இஞ்சி, பச்சை மிளகாய், புதினாவை அரைத்து உப்பு லெமன் ஜூஸ் கலந்து சாதத்துக்கு தொட்டுக் கொள்வது
போன்ற சில வகையான பாட்டி காலத்து வீட்டு வைத்திய முறைகளும் நல்ல ஜீரணத்திற்கும், வயிற்று வீக்கம் குறையவும் உதவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)