ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அடங்கிய சைவ உணவுகள் தெரியுமா?

Do you know vegetarian foods that contain omega 3 fatty acids?
Do you know vegetarian foods that contain omega 3 fatty acids?https://www.ndtv.com
Published on

மேகா 3 என்பது, ஸ்ட்ரோக் மற்றும் இதய நோய்களை  உண்டாக்கும் அபாயத்தைத் தரக்கூடிய ட்ரைக்ளிசெரைட்களின் அளவைக் குறைத்து இதயத்தைக் காக்கக்கூடிய தன்மை கொண்டது. உடலுக்குத் தேவையான மொத்த ஒமேகா 3 அளவையும் நம் உடலுக்குள்ளிருந்தே தயாரிப்பது சாத்தியமாகாத ஒன்று என்பதால் அவற்றை நாம் உட்கொள்ளும் உணவுகளிலிருந்தே பெற வேண்டியதுள்ளது. அவற்றுள் மீன் வகைகளில் அதிகளவு ஒமேகா 3 உள்ளது. சைவ உணவு உண்பவர்கள் எந்த வகை உணவுகளிலிருந்து இந்தச் சத்தைப் பெறலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

சியா விதைகளில் அதிகளவு ஊட்டச்சத்துக்களுடன் ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் அடங்கியுள்ளது. வால்நட்டில் இதயத்திலுள்ள இரத்த நாளங்களை ஆரோக்கியமாய் வைத்துக்கொள்ள உதவும் ஒமேகா 3  அதிகமுள்ளது.

ஒரு கப் கிட்னி பீனில் 210 மில்லி கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. எனவே, கிட்னி பீனில் சமைக்கக்கூடிய விதவிதமான ரெசிபிகளை கற்றுக்கொண்டு அடிக்கடி செய்து நலம் பெறலாம்.

சோயா பீன் எண்ணெயில் சமைக்கும்போது ஒரு வேளை உணவிலேயே உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான ஒமேகா 3 கிடைத்துவிடும்.

இதையும் படியுங்கள்:
காஷ்மீரி மலைப்பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
Do you know vegetarian foods that contain omega 3 fatty acids?

வால்நட்டில் உள்ள அளவுக்கு மொச்சை (Edamame) கொட்டையிலும் ஒமேகா 3, ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஃபிளாக்ஸ் விதைகளை தினசரி உண்பதால் ஒமேகா 3 கிடைக்கும். தேவைக்கதிகமான கொழுப்பு குறையும்.

ப்ரஸ்ஸல் ஸ்பிரௌட் (Brussel Sprout) அதிகளவு ஊட்டச் சத்துக்களோடு ஒமேகா 3 வழங்குவதிலும் முன்னிலையில் உள்ளது. நோரி (Nori) போன்ற சில வகை கடற்பாசிகளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் அயோடின் சத்தானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தைராய்ட் பிரச்னைகளைத் தீர்க்கவும் உதவுகின்றன.

அசைவம் சாப்பிடாதவர்கள் மேற்கூறிய உணவுகளை அடிக்கடி உட்கொண்டு நன்மை பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com