எலெஃபென்ட் ஆப்பிள் என்பது என்னவென்று தெரியுமா?

Do you know what elephant apple is?
Do you know what elephant apple is?https://www.amazon.in

லெஃபென்ட் ஆப்பிள் அல்லது சால்ட்டா (Chalta) என்பது வங்காளம் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் சாதாரணமாக உண்ணப்படும் ஒரு வகைப் பழமாகும். இதிலுள்ள மருத்துவ குணங்களுக்காக இப்பழம் யுனானி மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் தயாரிப்பில் ஒரு கூட்டுப்பொருளாக சேர்க்கப்படுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து, ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்களுக்காக இந்த அரிய வகைப் பழத்தை பலரும் உட்கொண்டு வருகின்றனர். இதிலுள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாமா?

சால்ட்டாவில் ஆன்டி மைக்ரோபியல் குணம் உள்ளது. இதனால், பூஞ்சை மற்றும் தொற்றுக்களால் சருமத்தில் ஏற்படும் நோய்கள் மற்றும் காயங்கள் மீது சால்ட்டாவின் சாறை எடுத்துத் தடவினால் குணமுண்டாகும்.

இந்தப் பழத்தில் ஹெபட்டோ ப்ரொடெக்டிவ் (Hepato protective) குணம் உள்ளது. இது கல்லீரலில் சிதைவு ஏற்படுவதைத் தடுத்து அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவி புரிகிறது.

இதிலுள்ள வைட்டமின் C நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும், தொற்று நோய்களைக் குணமாக்கவும் செய்யும்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃபிரிரேடிகல்களின் அளவை சமநிலைப்படுத்தி ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கின்றன. இதனால் இதய நோய், கேன்சர் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயம் தவிர்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
‘நட’ப்பதெல்லாம் நன்மைக்கே!
Do you know what elephant apple is?

இதிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது உடலின் வீக்கங்களைக் குறைக்கவும் ஆர்த்ரைடிஸ் நோயை குணமாக்கவும் உதவுகிறது; குடலில் இருக்கும் இதுபோன்ற கோளாறுகளையும் குணமடையச் செய்கிறது.

இந்தப் பழத்தில் உள்ள டயட்டரி நார்ச்சத்து, வைட்டமின் C, கால்சியம், இரும்புச் சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகியவை உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படச் செய்கின்றன. டயட்டரி நார்ச்சத்தானது சீரான செரிமானத்துக்கும், சிக்கலில்லாமல் மலம் வெளியேறவும் உதவுகிறது. பேதி, சீதபேதி போன்ற  இரைப்பை குடல் நோய் வராமலும் பாதுகாக்கிறது. அதிக நேரம் இது வயிற்றில் தங்குவதால் பசி எடுக்கும் உணர்வு தள்ளிப்போகிறது. இதனால் உட்கொள்ளும் கலோரி அளவு குறைந்து எடைப் பராமரிப்பிற்கும் உதவுகிறது. இத்தனை நன்மைகள் தரும் எலெஃபென்ட் ஆப்பிள் பழத்தை நாமும் உண்டு உடல் நலத்தின் ஆரோக்கியத்தைக் காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com