பழம் சாப்பிடுவது யாருக்குத்தான் பிடிக்காது எல்லோருக்கும் பிடித்த விஷயம் தான் ஆனால் எந்த பழத்தை எப்போது சாப்பிட்டால் நம் உடலுக்கு நல்லது என்பது பற்றி தெரியுமா உங்களுக்கு? இதோ அது குறித்த பதிவு தான் இது.
காலை வெறும் வயிற்றில் நீங்கள் சாப்பிடக் கூடிய பழம், உங்கள் வயிறை சுத்தம் செய்வதாக அமைய வேண்டும். மலச்சிக்கலையும் அது போக்கும். நம் உணவில் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவை நிறைந்த பொருட்களை குறைத்துக் கொண்டு, நார்ச்சத்து, ஊட்டத்துச்சத்துகள் நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மக்களிடமும் கூட, பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது என்றாலும் கூட, எந்த சமயத்தில் என்ன பழங்களை நாம் சாப்பிட வேண்டும் என்பது குறித்தும், பழங்களால் ஏற்படும் நன்மை குறித்தும் பலருக்கும் தெரிவதில்லை.
காலை நேரத்தில்:
ஒரு கப் நிறைய பழங்களை காலை உணவாக எடுத்துக் கொள்ள பலர் விரும்புகின்றனர். இதனால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். காலை உணவுக்குப் பதிலாக பழங்களை சாப்பிட நீங்கள் முடிவு செய்தால் வெவ்வேறு பழங்களை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக அன்னாசி, செர்ரி, கிவி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம். காலையில் ஆப்பிள் சாப்பிடுவதன் மூலமாக உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.
மதிய நேரத்தில்: பகல் பொழுதில் நிறைந்த சர்க்கரை சத்து உடைய பழங்களை சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஏனென்றால் இந்த சமயத்தில் தான் உங்கள் ஜீரண மண்டலத்தை தூண்டுவதற்கு ஏதுவாக ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கான ஆற்றல் அதிகம் தேவைப்படும். இந்த சமயத்தில் நீங்கள் வாழைப்பழம் அல்லது மாம்பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.
இரவு நேரத்தில்: உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சினை இருந்தால் நீங்கள் கண்டிப்பாக இரவில் பழம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தூங்குவதற்கு சற்று முன்பாக பழம் சாப்பிடாமல், சில மணி நேரத்துக்கு முன்பாக சாப்பிட வேண்டும். அன்னாசி, அவகோடா, கிவி போன்ற பழங்கள் இரவில் சாப்பிட உகந்த பழங்கள் ஆகும்.
காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியது: காலை வெறும் வயிற்றில் நீங்கள் சாப்பிடக் கூடிய பழம், உங்கள் வயிறை சுத்தம் செய்வதாக அமைய வேண்டும். மலச்சிக்கலையும் அது போக்கும். ஆகவே, நிறைந்த நார்ச்சத்து கொண்ட பழத்தை காலையில் எடுத்துக் கொள்ள வேண்டும். காலையில் நீங்கள் தர்பூசணி, பப்பாளி, கொய்யா, மாம்பழம், மாதுளை மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.