ஹம்முஸ் என்றால் என்ன தெரியுமா?

Do you know what hummus is?
Do you know what hummus is?https://cookpad.com
Published on

ம்முஸ் என்பது மத்திய கிழக்குப் பகுதிகளில் பிரசித்தமான ஓர் உணவு. வேக வைத்து மசித்த கொண்டைக் கடலை பேஸ்ட், தஹினி (வருத்த வெள்ளை எள்ளுடன் சிறிது ஆலிவ் ஆயில், உப்பு சேர்த்து அரைத்த பேஸ்ட்), பூண்டு, சீரகம், லெமன் ஜூஸ் ஆகியவவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு பேஸ்டாக அரைத்தெடுப்பதே ஹம்முஸ்.

இதை ஜாம், பட்டர் போல பிரட் தூண்டுகளுக்கு நடுவே தடவியும், வேறு சில வகை ரொட்டிகளை இதைத் தொட்டுக் (dip) கொண்டும் உண்கின்றனர். அதிக சுவை கொண்ட இந்த ஹம்முஸ்ஸில் அடங்கியிருக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஹம்முஸ் உணவின் முக்கிய கூட்டுப் பொருளான கொண்டைக்கடலை, தாவர அடிப்படை கொண்ட புரதம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்டது. சைவ உணவு உண்பவர்களுக்கு, புரதச் சத்துக்களைப் பெறுவதற்கு ஏற்ற ஓர் அருமையான உணவு இது.

தஹினி, மோனோ அன்சாச்சுரேட்டட் என்ற இயற்கையான நல்ல கொழுப்பு அடங்கியது. இது இதயத்திற்கு நல்ல ஆரோக்கியம் தர வல்லது. தொடர்ந்து கொண்டக்கடலை போன்ற பருப்பு வகையை உண்பதும் இதய நோய் வரும் அபாயத்தைத் தடுக்கும்.

குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது ஹம்முஸ். இரத்தத்தில் கலக்கும் சர்க்கரையின் அளவை குறையச் செய்வதால், டயாபெடிக் நோய் உள்ளவர்களும் உண்ணுவதற்கு ஏற்ற உணவு இது.

இதையும் படியுங்கள்:
பல் வலியை பட்டுனு விரட்ட நச்சுனு சில டிப்ஸ். 
Do you know what hummus is?

புரதம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இதில் அதிகம் இருப்பதால் இதை உண்பவர்களுக்கு விரைவில் பசியுணர்வு வராது. உணவு உட்கொள்ளும் இடைவெளி அதிகரிப்பதால், எடுத்துக் கொள்ளும் கலோரி அளவும் குறைந்து, உடல் எடை குறைப்பிற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கிறது.

க்ளூட்டன், நட்ஸ், பால் பொருட்கள் எதுவும் இதன் தயாரிப்பில் சேர்க்கப்படாதலால், இதை லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களும், ஒவ்வாமை உள்ளவர்களும் கூட தாராளமாக உண்ணலாம். சீலியாக் (celiac) நோய் உள்ளவர்களும் உண்ண ஏற்றது ஹம்முஸ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com