‘ஆண்ட்ரோபாஸ்’ என்றால் என்ன தெரியுமா?

Do you know what is 'Androbus'?
Do you know what is 'Androbus'?

டுத்தர வயதைக் கடந்த சில ஆண்களுக்கு திடீரென மூடு மாற்றம், எரிச்சல் படுதல், சோம்பேறித்தனம், விரக்தியுணர்வு, தூக்கக் குறைபாடுகள், செக்ஸ் ஆர்வ குறைபாடு, பலவீனமாக உணர்தல், எடை குறைதல், அன்றாட வாழ்க்கையில் ஆர்வமின்மை, தூங்கி தூங்கிவழிதல், சாப்பிட்ட பின் தூக்கம், சோக உணர்வு, மூட்டுகளில் வலி, குறைந்த வயதில் வயோதிக தோற்றம், முடி மற்றும் சரும மாற்றம், வேலையில் சுணக்கம் இவற்றில் ஒன்றோ அல்லது பலவோ சேர்ந்து வந்தால் நீங்கள் ‘ஆதாம்’ (ADAM) நிலையில் இருக்கிறீர்கள் என்கிறார்கள். அது என்ன ‘ஆதாம்’ (ஆன்ரோஜென் டெஃபிஷியன்ஷி அன்டு ஏஜிங் இன் மென்.)

டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன்தான் ஆண்களுக்கு செக்ஸ் உணர்வுகளைத் தருகிறது. அதோடு எலும்பு மற்றும் சதை வளர்ச்சிக்கும் உதவுகிறது, இந்த ஹார்மோன்கள் சுரப்பு பொதுவாக 40 வயது முதல் 60 வயதிற்குள் குறைந்து பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதுபோல், ஆண்களுக்கும் ஏற்படுகிறது. இதைத்தான் ஆண்களின் மெனோபாஸ் என்கிறார்கள். இதை மருத்துவ ரீதியாக ‘ஆண்ட்ரோபாஸ்’ என்கிறார்கள். பொதுவாக 45 வயது முதல் 60 வயது வரை ஏற்படும் இந்நிலை, சில நேரங்களில் சிலருக்கு 30 வயதில் கூட ஏற்படுமாம்.

1944ம் ஆண்டு அமெரிக்க டாக்டர் கார்ல் ஹெல்லர் மற்றும் ஜியார்டன் மெர்ஸ் என்பவர்கள் ஆண் மெனோபாஸ் என்ற ‘ஆண்ட்ரோபாஸ்’ என்ற வார்த்தையை முதல் முறையாக பயன்படுத்தினார்கள். ஆண் மெனோபாஸ் ஏன் ஏற்படுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும் சில காரணிகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்பதை கண்டறிந்துள்ளனர். ஹார்மோன்கள் குறைபாடு, அதிகப்படியான ஆல்கஹால் உபயோகம், மிதமிஞ்சிய உடல் எடை, புகைபிடித்தல், அதிக இரத்த அழுத்தம், தரமற்ற மருந்துகள் உபயோகம், சத்து குறைவான சாப்பாடு, உடற்பயிற்சி இல்லாமை போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். இதை எப்படி அறிவது? இதனை 50 வயதில் ஆண்கள் புரோஸ்டேட் ஸ்பெசிபிக் ஆன்டீஜன் (PSA) எனும் டெஸ்டை எடுத்துக் கொள்வதன் மூலம் அறியலாம். உலகில் 40 சதவீத ஆண்களுக்கு இந்தக் குறைபாடுகள் உண்டு.

இதனைத் தவிர்க்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி அல்லது ஜாக்கிங் செய்ய வேண்டும். குறைந்த அளவு கொழுப்பு உணவையும், அதிகப்படியான நார்ச்சத்து உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தண்ணீர் போதுமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும், போதிய அளவு தூக்கம், குறைந்த அளவில் காபி, டீ, மது எடுத்துக்கொள்ள வேண்டும். நல்வழிப்படுத்தும் ஆதரவான நட்பு வட்டம் தேவை. அன்றாட வாழ்வில் விரக்தியுணர்வைத் தவிர்க்க வேண்டும்.

ஆண்களுக்கு இதுபோன்ற ஆற்றல் குறைபாடு ஏற்பட முக்கியக் காரணமாக இருப்பது தூக்கமின்மையே. நேரம் கடந்து தூங்குபவருக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு முற்றிலுமாக குறையும் என்கிறார்கள் தைவான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். எனவே, 7 மணி நேர தூக்கம் மிக அவசியமானது. வீட்டு சாப்பாட்டை தவிர்த்து, அடிக்கடி ஹோட்டல், பாஸ்ட் புட் என சாப்பிடும் நபர்களுக்கு ஹார்மோன்கள் சுரப்புத் தன்மை பாதிக்கப்படும் என்கிறார்கள் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பு குறைபாடுகளுக்குக் காரணம் அவர்கள் அதிகளவில் எடுத்துக்கொள்ளும் பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களாக இருக்கலாம் என்கிறார்கள் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். இதனால் எந்தக் காய்கறிகள் மற்றும் பழங்களையும் உப்பு நீரில் கழுவிய பின்னரே உபயோகிக்க வேண்டும்.

டெஸ்டோஸ்டிரோன் குறைவை தடுக்க வால் நட், பாதாம், முந்திரி, நிலக்கடலை போன்ற கொட்டை உணவுகளை தினமும் சாப்பிட்டு வர வேண்டும்! இவற்றில் ஆர்ஜினைன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தும். இளம் வயதில் (20 - 35) தினமும் 60 கிராம் நட்ஸ் சாப்பிட்டு வர, டெஸ்டோஸ்டிரோஜன் சுரப்பு குறைபாடுகள் வருவதில்லை என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
30 வயதுக்கு மேல் ஆண்கள் அடிக்கடி சாப்பிட வேண்டிய உணவுகள்!
Do you know what is 'Androbus'?

டெஸ்டோஸ்டிரோனின் சுரப்பை அதிகரிக்கும் நொதிகள் வெந்தயத்தில் நிறைந்துள்ளன. ஆண்களின் உடல் வலிமையை அதிகரிக்க வெந்தயம் பயனுள்ளதாக இருக்கிறது. வெந்தயத்தைத் தவறாமல் உட்கொள்வது உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, டெஸ்டோஸ்டிரோனின் அளவை அதிகரிக்க உதவும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதும் டெஸ்ட்ரோஜன் சுரப்பை குறைக்கும். ஆண்களுக்கு ஜின்க் அதிகம் நிறைந்த உணவுகள் உடலுக்குத் தேவை. குறிப்பாக இறைச்சி, பீன்ஸ், நண்டு, முழு தானியங்கள், கொட்டை வகைகள் போன்றவற்றை உணவில் மிகுதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 11 mg அளவு ஜின்க் கொண்ட உணவுகளை ஆண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும் இந்த உணவுகளை ஆண்கள் 30 வயதிற்கு மேல் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். கம்பு, சோளம், கேழ்வரகு, கார் அரிசி, பார்லி, கோதுமை மற்றும் கோதுமைப் புல், பீன்ஸ், சோயா பீன்ஸ், முட்டை கோஸ், காலிபிளவர், முருங்கைக்காய் மற்றும் முருங்கைக்கீரை, கத்திரிக்காய், மாங்காய், பேரிச்சம்பழம், நெல்லிக்காய், தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, அரைக்கீரை, தறுந்தாளிக்கீரை இவற்றுடன் ஷிலாஜித், அஸ்வகந்தா, ஜின்ஸெங் போன்ற சில மூலிகை மருந்துகள் எடுத்துக்கொள்வதும் நன்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com