30 வயதுக்கு மேல் ஆண்கள் அடிக்கடி சாப்பிட வேண்டிய உணவுகள்!

Foods that men over 30 should eat frequently.
Foods that men over 30 should eat frequently.

யதாக வயதாக நாம் அனைவருக்குமே உடல் பலகீனமடைய ஆரம்பிக்கும். எனவே, நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக, உண்ணும் உணவில் கவனம் செலுத்தினாலே உடலை நன்றாக வைத்திருக்கலாம். பெண்கள் எப்போதுமே தங்கள் ஆரோக்கியத்தையும் அழகையும் பராமரிப்பதில் கை தேர்ந்தவர்கள். ஆனால், ஆண்கள் வேலை வேலை எனக்கூறி தமது உடலின் மீது அக்கறை காட்டுவதில்லை. இதனாலேயே ஆண்களுக்கு உயிரைப் பறிக்கும் நோய்களின் அபாயம் அதிகம்.

குறிப்பாக, ஆண்களுக்கு 30 வயது தாண்டியதும் உடலில் பிரச்னைகள் ஏற்பட ஆரம்பிக்கும். அந்தப் பிரச்னையை தொடக்கத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அது மிகப்பெரிய பிரச்னையாக மாறிவிடும். எனவே, 30 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்தப் பதிவில் 30 வயதிற்கு மேல் எதுபோன்ற உணவுகளை ஆண்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

கீரைகள்: 30 வயதுக்கு மேல் ஆண்கள் தினசரி தங்கள் உணவில் கொஞ்சமாவது கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், கீரையில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் உள்ளன. இவை நம் உடலில் பல நோய்களை எதிர்த்துப் போராடுகிறது. மேலும், இதில் நார் சத்துக்களும் நிறைந்துள்ளதால், வயிற்று உபாதைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.

செர்ரி பழம்: செர்ரி பழத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது முப்பது வயதுக்கு மேல் ஆண்களின் உடலில் ஏற்படும் அலர்ஜியை கட்டுப்படுத்துகிறது. மேலும், ஆண், பெண் என இரு பாலரையும் தாக்கும் எலும்பு தொடர்பான பிரச்னைகளையும் சரிசெய்கிறது.

இதையும் படியுங்கள்:
உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை அகற்ற உதவும் பானங்கள்!
Foods that men over 30 should eat frequently.

உருளைக்கிழங்கு: பலர் வயது ஏற ஏற உருளைக்கிழங்கு சாப்பிடுவதை நிறுத்தி விடுவார்கள். ஏனெனில், அதனால் வாயு பிரச்னை ஏற்படும் எனச் சொல்வார்கள். ஆனால், உருளைக்கிழங்கில் அதிகப்படியான பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. அதுவும் வாழைப்பழத்தில் இருப்பதை விட உருளைக்கிழங்கில் அதிகம் இருப்பதால் நமது இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பொட்டாசியம் சத்து உதவும். எனவே BP பிரச்னை உங்களுக்கு வரக்கூடாதென்றால் உருளைக்கிழங்கை அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தயிர்: 30 வயதுக்கு மேல் நம்முடைய எலும்பு அதன் பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடும் என ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, அது பலமடைய கால்சியம் சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தயிரில் அதிகப்படியான கால்சியம் மற்றும் வைட்டமின் கே2 உள்ளது. இது எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தைக் கொடுத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். எனவே, முப்பது வயதுக்கு மேல் ஆண்கள் உணவில் தயிர் சேர்த்துக் கொள்வது அவசியம்.

பீன்ஸ்: நார்ச்சத்து அதிகம் நிறைந்த பீன்ஸை 30 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள் தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும் என, ‘அகாடமி ஆப் நியூட்ரிஷன் அண்ட் டயாபட்டிக்ஸ்’ சொல்கிறது. நார்ச்சத்து, சர்க்கரை அளவு மற்றும் பசியை கட்டுப்படுத்த உதவும். இதனால் குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com