நெஞ்சு எரிச்சலுக்கான காரணமும் தீர்வும் தெரியுமா?

நெஞ்சு எரிச்சலுக்கான காரணமும் தீர்வும் தெரியுமா?
Published on

ணவு செரிமானத்துக்காக வயிற்றில் உற்பத்தியாகும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவுக்குழாயின் மேலே செல்லும்போது அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இது மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல், வாயு, புளித்த ஏப்பம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

இதனால் ஒருவிதமான அசெளகரியமான சூழ்நிலையை உருவாகும். இந்த அசிடிட்டி பிரச்னையை சமாளிப்பதற்கு சில வழிகள் உள்ளன. அவை என்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

வயிற்றில் சுரக்கும் அமிலங்களை சீர்படுத்தும் தன்மை சீரகம் மற்றும் சோம்புக்கு உண்டு. நான்கு டம்ளர் தண்ணீரில் நான்கு தேக்கரண்டி சீரகம் மற்றும் நான்கு தேக்கரண்டி சோம்பு சேர்த்து கொதிக்கவைத்தால் கஷாயம்போல் வரும். இதை வடிகட்டி உணவு சாப்பிட்ட பிறகு பருகினால் அசிடிட்டி அல்லது நெஞ்சு எரிச்சல் பிரச்னைக்கு தீர்வு காணலாம்.

சமையலில் இஞ்சியை சேர்த்துக்கொண்டால் அசிடிட்டி போன்ற பிரச்னைகள் வராது. தண்ணீரில் இஞ்சியை கொதிக்க  வைத்து உணவுக்குப் பின் குடிக்கலாம். ஒரு சிறிய துண்டு இஞ்சியை கல் உப்பில் பிரட்டி உணவு சாப்பிடுவதற்கு முன் வாயில்போட்டு மென்று சாப்பிடலாம். இது செரிமானத்தைத் தூண்டுகிறது.

வீட்டில் கிராம்பு இருந்தால் நான்கு கிராம்புகளை எடுத்து வாயில் போட்டு ஒரு பத்து நிமிடம் மெல்லுங்கள். இது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைத் தூண்டி நெஞ்சு எரிச்சலை குறைக்க உதவும். தாமதமாக உணவு சாப்பிடுவதாலும் நெஞ்சு எரிச்சல் வரலாம்.

நன்கு காய்ச்சி ஆற வைத்த பாலை உணவுக்கு முன் குடிப்பதும் நல்லது. ஆனால், பாலுடன் ஒரு தேக்கரண்டி ரோஸ் சிரப்பை கலந்து குடிப்பது நெஞ்சு எரிச்சலைக் குறைக்க உதவும். வீட்டில் உறை ஊற்றப்பட்ட தயிரைக் கடைந்து மோராக்கி, அத்துடன் துருவிய வெள்ளரிக்காய், பிங்க் சால்ட், சீரகத்தூள் கலந்தும் பருகலாம். உணவு சாப்பிட்ட பிறகு தேநீர் குடிப்பதும் அசிடிட்டி வராமல் தடுப்பதற்கான சிறந்த வழியாகும்.

உங்களுக்கு நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும் உணவுகளின் பட்டியலை தெரிந்துகொண்டு அதிலிருந்து விலகி இருங்கள். நெஞ்சில் எரிச்சலைத் தூண்டும் உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் அசிடிட்டி பிரச்னை வராமல் தடுக்கலாம்.

எல்லாவற்றையும் விட நேரத்துக்கு உணவு சாப்பிடும் பழக்கத்தை கொண்டுவாருங்கள். நாம் உண்ணும் உணவில் கவனம் செலுத்தினாலே நெஞ்சு எரிச்சல் பிரச்னைக்கு தீர்வு கண்டுவிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com