ட்ரிஸ்கைடேகா ஃபோபியா என்றால் என்னவென்று தெரியுமா?

Do you know what is Triscaideca Phobia?
Do you know what is Triscaideca Phobia?https://www.widodogroho.com/
Published on

லகத்தில் எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் 13 என்ற எண் உள்ள அறை இருக்காது. அதுவும் குறிப்பாக மேல் நாடுகளில் 13 என்ற எண்ணைக் கேட்டாலே அப சகுனமாக எண்ணுகிறார்கள். அதேபோல், 13ம் தேதியும் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வந்துவிட்டால் அவ்வளவுதான்; அலர்ஜியாகி விடுவார்கள். மேல் நாடுகளில் ஹோட்டல்களிலோ விடுதிகளிலோ 13ம் எண் கொண்ட மாடியோ, அறை எண் 13 என்றோ இல்லாமல் இருப்பதைக் காணலாம்.

மேற்கத்திய நாடுகளில் இந்த எண் அப சகுனமாகப் பார்க்கப்படுகிறது. இயேசுவின் கடைசி விருந்து (last supper) சாப்பிட்ட நபர்களின் எண்ணிக்கை 13 என்கிறார்கள். மேலும் இயேசு மரித்த நாள் வெள்ளிக்கிழமை 13ம் தேதி. குறிப்பாக, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் 13 என்ற எண் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இது ஒரு வகையான ஃபோபியா என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மருத்துவ உலகில் இதை, ‘ட்ரிஸ்கைடேகா ஃபோபியா’ என்கிறார்கள். உலகில் பல இடங்களில் ரூம் நம்பர் 13 என்றோ, 13ஆவது மாடியோ இருக்காது. 12க்கு பிறகு 14 என்றுதான் இருக்கும். இந்தியாவிலும் கூட சில வணிகக் கட்டடங்களிலோ, பெரிய நட்சத்திர ஹோட்டல்களிலோ 13வது மாடி, ரூம் நம்பர் 13 ஆகியவற்றைக் காண முடியாது.

பொதுவாகவே, உலகெங்கிலும் உள்ள மக்கள் வணிகக் கட்டடங்கள், அலுவலக இடங்கள் மற்றும் கடைகளுக்கு எண் 13ஐ தவிர்க்கின்றனர். இந்த எண் 13 என்பது அதிக அதிர்வுகளைக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் பரவும் மெட்ராஸ் ஐ: காரணமும் தீர்வும்!
Do you know what is Triscaideca Phobia?

13ம் எண் வீட்டில் வசிப்பவர்கள் மிகவும் அறிவுபூர்வமாக உந்தப்பட்டவர்களாகவும், ஆர்வமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், ஆற்றல் அதிர்வுகள் காரணமாக அவர்கள் ஒரு பணியில் நீண்ட நேரம் கவனம் செலுத்த மாட்டார்கள் என நம்பப்படுகிறது. எண் கணிதத்தின்படி 8 மற்றும் 13 என்ற எண்கள் அதிர்ஷ்டமானவை அல்ல என நம்பப்படுகிறது. ஆனால், சீன கலாசாரத்தில் 8 என்ற எண்ணை அதிர்ஷ்டமானதாக நம்புகிறார்கள்.

பல கட்டடங்களில் 13ஆவது தளம் இல்லை. பல நகரங்களில் 13வது தெரு அல்லது 13வது அவென்யூ இல்லை. ஹோட்டல் அறையிலும் இந்த எண் தவிர்க்கப்படுகிறது. இத்தாலியில் உள்ள ஒபரா ஹவுஸ் கூட இந்த எண்ணை தவிர்க்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com