பால் மற்றும் பால் பொருட்களில் இத்தனை ஊட்டச்சத்துக்களா?

So many nutrients in milk and milk products?
So many nutrients in milk and milk products?https://tamil.boldsky.com

பால், நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பொருளாக உள்ளது. காபி, டீ, மில்க் ஷேக் என பலவித பானங்களாகப் பருகுவதற்கும், கேக், ஐஸ்கிரீம், சாக்லெட் மற்றும் இனிப்புப் பலகாரங்கள் தயாரிப்பிலும் பால் சேர்க்கப்படுகிறது. தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்றவையும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் முக்கியமான பால் பொருட்களாகும். இவையும் பல்வேறு வகைகளில் உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவுப் பொருட்களில், பால் முக்கிய இடம் பெறுகிறது. அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவுப் பொருளாக பால் மற்றும் பால் பொருட்கள் விளங்குகின்றன. பால் மற்றும் பால் பொருட்கள் குறைந்த ஆற்றல் வழங்குபவை. ஒரு 'கப்' பாலில் 80 முதல் 120 கலோரி ஆற்றல் உடலுக்குக் கிடைக்கிறது. எனவே, உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள விரும்புபவர்களும், குண்டு உடலைக் குறைக்க விரும்புவர்களும் பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பால், உடலுக்குத் தேவையான 100 சதவீத கால்சியம் தேவையைப் பூர்த்தி செய்கிறது. 75 சதவீதம் வைட்டமின்-டி மற்றும் வைட்டமின் பி12 கிடைக்கச் செய்கிறது. 250 கிராம் எடை கொண்ட ஒரு கோப்பைப் பாலில் தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவில் 478 கிராம் வைட்டமின் ஏ, 32 சதவீதம் வைட்டமின் டி காணப்படுகிறது. மேலும், வைட்டமின் கே மற்றும் பி குழும வைட்டமின்களான தயாமின், ரிபோபுளேவின், நியாசின், வைட்டமின் பி6. வைட்டமின் பி12 ஆகியவையும் குறைந்த அளவில் உள்ளன.

பாலில் கொழுப்புச்சத்து குறைந்த அளவில் காணப்படுகிறது. 250 கிராம் பாலில் 2.4 கிராம் மட்டுமே கொழுப்பு உள்ளது. உடம்புக்கு வலு சேர்க்கும் அத்தியாவசியத் தாது உப்புக்களான கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், தாமிரம். மாங்கனீசு போன்றவை சராசரியாகக் காணப்படுன்கிறன.

பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் புரதப் பொருட்கள் மிகுந்துள்ளன. இவை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் உறுதிக்கு உதவுகின்றன. சிறு வயது முதலே பால் மற்றும் பால் பொருட்களைத் தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்பு பலவீனம், எலும்பு உடைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படாது.

இதையும் படியுங்கள்:
ஒமேகா3 குடியிருக்கும் ஆளி விதை!
So many nutrients in milk and milk products?

பாலில் உள்ள கால்சியமும், பாஸ்பரசும் பற்களுக்கு நன்மை பயக்கின்றன. இதிலுள்ள கேசின் என்ற பொருள் பற்களின் எனாமலைப் பாதுகாக்கும். பால் உணவுகளை பழங்களுடன் குறைந்த உப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்படுகிறது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

'கார்டியோவாஸ்குலார்' எனும் இதய பாதிப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் பால் மற்றும் பால் பொருட்களுக்கு உண்டு. கால்சியம் தாது, இரத்தத்தில் கெட்ட கொழுப்புப் பொருட்கள் அதிகமாவதைத் தடுக்கிறது. இதனால் இதய பாதிப்பு உள்பட, பல்வேறு பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

சமீபத்தில் 37 ஆயிரம் நடுத்தர வயதுப் பெண்மணிகளுக்குப் பால் உணவுகளைக் கொடுத்து ஆராய்ச்சி செய்ததில். டைப் 2 நீரிழிவு கட்டுப்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com