ஃபில்ட்ரம் என்றால் என்னவென்று தெரியுமா?

Philtrum
Philtrumhttps://ca.news.yahoo.com

னிதனின் உடல் குறித்து ஆச்சரியமான விஷயங்கள் நிறைய உள்ளன. அந்த வகையில் மனித முகத்தில் உள்ள ஒரு பகுதியின் பெயர்தான் ஃபில்ட்ரம் (Philtrum) என்பது. பலருக்கும் மிகவும் பரிச்சயமான பகுதி இது. ஆனால், நிறைய பேருக்கு இதன் பெயர் இதுதான் என்பது தெரியாது. மூக்கிற்கும் மேல் உதட்டிற்கும் இடையில் உள்ள பகுதியின் பெயர்தான் ஃபில்ட்ரம் என்பதாகும்.

மனிதர்கள் மற்றும் பெரும்பான்மையான விலங்குகளுக்கும் மூக்கிற்கும் உதடுகளுக்கும் இடையில் உள்ள தாழ்வான பகுதியை குறிப்பிடும் ஆங்கிலச் சொல்தான் இது.

ஃபில்ட்ரம் என்பது மூக்கின் அடிப்பகுதியில் இருந்து உதட்டின் மேல் வரை செல்லும் செங்குத்து பள்ளமாகும். இது முகத்திற்கு ஒரு தோற்றத்தை அளிக்கிறது. இது ஆண்களுக்கு மீசைக்கான ஒரு அழகான இடமாகும். இது மிகச்சிறந்த முதலுதவி மையமாகவும் விளங்குகிறது.

இதையும் படியுங்கள்:
ஈசன் கட்டளைப்படி இயங்கும் குபேரன் மற்றும் சங்கநிதி பதுமநிதி!
Philtrum

மூக்கிலிருந்து லேசான இரத்தம் வெளிப்பட்டால் இந்த பகுதியை சிறிது லேசான அழுத்தம் கொடுத்து இரத்தப் போக்கை நிறுத்த தலையை பின்னுக்கு சாய்த்து உட்கார்ந்த நிலையில் இருக்க இரத்தம் வருவது நிற்கும்.

தற்காலத்தில் இந்தப் பகுதியில் (ஃபில்ட்ரம்) நகைகள் அணிவது ட்ரெண்டிங்கில் இருப்பதால் இது குறித்து அதிகமாகப் பேசப்படுகிறது. இந்தப் பகுதியில் அணியும் நகைகள் ஃபில்ட்ரம் நகைகள் என அழைக்கப்படுகின்றன.

மூக்கிற்கும் உதட்டிற்கும் இடையே உள்ள சதையின் நடுப்பகுதி சற்று உள்வாங்கி இருக்கும் பகுதி. இது மனிதர்களுக்கும் பெரும்பாலான விலங்குகளுக்கும் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com