குடல் இயக்கம் சரியாக நடைபெறாவிட்டால் என்னென்ன பிரச்னைகள் உண்டாகும் தெரியுமா?

Bowel movement
Bowel movement
Published on

ம் ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியம் குறையும்போது வயிறு வீக்கம், வாய்வு, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு நெஞ்செரிச்சல் போன்ற பல வகையான உடல் உபாதைகள் உண்டாகக் கூடும். இதற்கான முக்கியக் காரணம் நம் ஜீரண மண்டலத்திலிருக்கும் நன்மை தரும் பாக்டீரியாக்களின் அளவில் சமநிலை இல்லாமல் போவதேயாகும். இந்த நுண்ணுயிரிகள் அளவில் அதிகமாகும்போது அல்லது குறையும்போது என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. சில குறிப்பிட்ட வகை உணவுகளை உட்கொள்ளும்போது அவை ஜீரணமாவதில் சிரமம் ஏற்பட்டு குமட்டல், வீக்கம் மற்றும் வயிற்று வலி போன்ற அசௌகரியங்கள் உண்டாகும்.

2. ஊட்டச் சத்துக்களை உடல் உறிஞ்சுவதிலும், கொழுப்புச் சத்துக்களை சேமித்து வைப்பதிலும் வரையறையின்றிப் போய் உடல் எடை திடீரென ஏறவும் இறங்கவும் செய்யும்.

3. ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியமின்மை, செரோடோனின் என்ற ஹார்மோன் உற்பத்திக்கு உதவி புரிந்து, இன்சோம்னியா போன்ற தூக்கம் வராத நிலை அல்லது தரமான தூக்கம் வராமல் போகும் நிலைமையை உண்டுபண்ணும்.

4. நன்கு ஓய்வெடுத்த பின்னும் தொடர்ந்து சோர்வடைதல் அல்லது பலஹீனமாக உணர்தல் போன்ற கோளாறுகளும் ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியமின்மை காரணமாகவே வருபவை.

5. சருமத்தில் சொறி சிரங்கு, பருக்கள் வருவது அல்லது எரிச்சல் அடைவது போன்றவையும், குடலில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலையற்ற தன்மையால் உருவாகும் வீக்கத்தினால் வரும் கோளாறுகளேயாகும்.

6. இனிப்பு வகைகளைச் சேர்ந்த உணவுகளை உடனே உட்கொள்ளவேண்டும் என்ற அதீத ஆசையைத் தூண்டுவதும் குடலில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலையற்ற தன்மையால் வருவதே ஆகும்.

7. ஜீரண மண்டல உறுப்புகள் ஆரோக்கியம் குன்றியிருக்கும்போது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியமும் குறையும். இதனால் தொற்று நோய்க் கிருமிகள் சுலபமாக உடலுக்குள் புகுந்து சளி, இருமல் போன்ற நோய்கள் வர வழி வகுக்கும்.

இதையும் படியுங்கள்:
மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 
Bowel movement

8. செரோடோனின் போன்ற நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களை உற்பத்தி செய்து கவலைகள் மற்றும் மன அழுத்தம் போன்ற மன நிலையில் மாற்றம் உண்டாக்கக் கூடிய செயல்களும் ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டவைகளேயாகும்.

எனவே, ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கு உதவக்கூடிய நுண்ணுயிரிகளை ஆரோக்கியமாகவும் சமநிலைப்படுத்தி வைக்கவும் நாம் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள், பருப்பு வகைகள், காய், கனி, கீரை, ப்ரோபயோட்டிக்ஸ் நிறைந்த யோகர்ட், சீஸ், ஊறுகாய் போன்ற பல வகையான உணவுகளை உட்கொள்வது அவசியமாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com