மெடிடெரேனியன் டயட் என்றால் என்ன தெரியுமா?

Do you know what the Mediterranean Diet is?
Do you know what the Mediterranean Diet is?https://healingworksfoundation.org

மெடிடெரேனியன் டயட் (Mediterranean Diet) என்பது மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சார்ந்த நாடுகளில் பல காலங்களுக்கு முன்பிருந்தே உண்ணப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய உணவாகும். இது பல வண்ணங்கள் கொண்ட காய்கறி வகைகள், பழங்கள், முழு தானியங்கள், ஆரோக்கிய கொழுப்பு கொண்ட மீன், சிக்கன், பருப்பு, தாவர கொட்டைகள், ஆலிவ் ஆயில் போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைந்த பலவகை உணவுகள் அடங்கிய சரிவிகித உணவாகும். நாளடைவில் இது பிற நாடுகளுக்கும் பரவி, உடல் நலனில் அக்கறை காட்டும் பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வகை உணவிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் என்னவென்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

இதில் சேர்க்கப்படும் காய்கறி மற்றும் பழங்களில் தேவையான வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அடங்கியுள்ளன. இவை ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கின்றன; உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. பிரவுன் ரைஸ், முழு கோதுமை, குயினோவா போன்ற தானியங்கள், நாள் முழுக்கத் தேவையான சக்தியைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும்.

இத்தானியங்கள் மற்றும் காய்கறி, பழங்களில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சிறப்பாக நடைபெறச் செய்கிறது; உடல் எடையை சமநிலையில் பராமரிக்கவும் உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துகிறது.

தாவரப் பொருட்களில் இருக்கும் நல்ல கொழுப்பு மற்றும் மீன் உணவிலிருந்து கிடைக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் இதய நோய் வராமல் தடுக்கவும் இரத்த நாளங்களில் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகின்றன. மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அறிவாற்றல் குறையாமல் பாதுகாக்கின்றன.

இதையும் படியுங்கள்:
உங்கள் வாழ்க்கையை மோசமாக மாற்றும் 15 விஷயங்கள்! 
Do you know what the Mediterranean Diet is?

மோனோ அன்சாச்சுரேட்டட் நல்ல கொழுப்புகள் ஆலிவ் எண்ணெயில் அதிகம் உள்ளன. இதுவும் இதயத்தை ஹார்ட் அட்டாக் வரும் அபாயத்திலிருந்து தடுத்துக் காக்கிறது. சிக்கன், மீன், பருப்பு வகைகள், தாவரக் கொட்டைகள் போன்றவற்றில் உள்ள புரோட்டீனானது வலுவான தசைகள் பெற உதவி புரிகின்றன.

மெடிடெரேனியன் டயட் ஸ்ட்ரோக் வராமல் தடுக்கிறது. இதில் சர்க்கரை அளவு சமநிலைப்படுத்தப்பட்டுள்ளதால் நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது. வயதான காரணத்தினால் வரும் மறதி நோயும் குறைகிறது. இத்தனை நற்பயன்கள் கொண்ட மெடிடெரேனியன் டயட்டை அனைவரும் பின்பற்றினால் நல்ல உடல் ஆரோக்கியம் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com