தனிமையில் மாரடைப்பு வந்தால் என்ன செய்யணும் தெரியுமா? 

Heart Attack
Heart Attack
Published on

வீட்டில் தனியாக இருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டால், என்ன செய்வது என்று தெரியாமல் பலர் திகைத்துப்போகிறார்கள். சரியான நேரத்தில் சரியான முதலுதவி அளிக்காவிட்டால், உயிருக்கே ஆபத்து நேரிடலாம். எனவே, வீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால், நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள சில எளிய வழிமுறைகளை அறிந்து வைத்திருப்பது அவசியம்.

மாரடைப்பு ஏற்படும்போது, நெஞ்சில் தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த வலி, நெஞ்சில் இருந்து இடது கை, தோள்பட்டை மற்றும் முதுகு வரை பரவக்கூடும். சிலருக்கு மூச்சுத் திணறல், மயக்கம், வியர்வை போன்ற அறிகுறிகளும் தோன்றலாம். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ உதவி பெறுவது மிகவும் முக்கியம். ஆனால், சில சமயங்களில் நாம் மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படலாம். குறிப்பாக, வீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு வந்தால், உடனடியாக யாரையும் உதவிக்கு அழைக்க முடியாத நிலை உருவாகலாம்.

இருமல் சிகிச்சை: வீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால், உடனடியாக பயப்படாமல் செயல்பட வேண்டியது முக்கியம். நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தால், இருமல் சிகிச்சை (Cough CPR) மூலம் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்யலாம். இதற்கு, ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, பின்னர் ஆக்ரோஷமாக இருங்கள். இருமல் சாதாரணமாக இல்லாமல், வலிமையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்பும், நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். இப்படி தொடர்ந்து இரும்பும்போது, உங்கள் இதயம் நின்றுவிடாமல் தொடர்ந்து துடிக்க உதவும். இதனால், உடலில் இரத்த ஓட்டம் சீராக பராமரிக்கப்பட்டு, இதயம் சீரான முறையில் இயங்கத் தொடங்கும். இந்த முதலுதவி, மருத்துவ உதவி கிடைக்கும் வரை உங்கள் உயிரை காக்க உதவும்.

இருமல் சிகிச்சைக்குப் பிறகு, உடல்நிலை சற்று சீரானதும், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல ஏற்பாடு செய்யுங்கள். நீங்களே ஓட்ட முடியாவிட்டால், ஆம்புலன்ஸை அழைக்கவும் அல்லது அருகில் இருப்பவர்களின் உதவியை நாடவும். மருத்துவமனைக்கு சென்று, முறையான சிகிச்சை பெறுவது மாரடைப்பிலிருந்து முழுமையாக குணமடைய உதவும்.

இதையும் படியுங்கள்:
40 வயதைக் கடந்தவர்களுக்கு மாரடைப்பு வராமல் தடுக்கும் விட்டமின்கள் என்னென்ன தெரியுமா? 
Heart Attack

மாரடைப்பு என்பது ஒரு அவசர மருத்துவ நிலை. வீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால், உடனடியாக செயல்பட்டு, இருமல் சிகிச்சை மூலம் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள முடியும். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரியான நேரத்தில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முதலுதவி மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com