உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் எளிய உணவுகள் எவை தெரியுமா?

Do you know which are the simple foods that keep the body healthy?
Do you know which are the simple foods that keep the body healthy?

ரு மனிதனின் பெரும் சொத்தே ஆரோக்கியம்தான். நாம் ஆரோக்கியத்தைக் காக்க பல வழிகளும் முயற்சி செய்கிறோம். உணவு முதல் உடற்பயிற்சி, மனப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி என எந்த வழியெல்லாம் இருக்கிறதோ அந்த வழிகளை எல்லாம் கையாளுகிறோம். ஆனால், மிகவும் சிம்பிளான கீழ்க்கண்ட இந்த உணவு வகைகளை முறையாக எடுத்துக் கொண்டாலே, நம் உடல் எப்பொழுதுமே ஆரோக்கியமாக இருக்கும்.

பருப்பு வகைகள்: பல்வேறு நிறங்களில் பருப்பு வகைகள் உள்ளன. அவை பார்ப்பதற்கு வண்ணமயமாக இருப்பதுடன், ஊட்டச்சத்துகளும் நிறைந்தவை. நார்ச்சத்து, புரதம் ஆகியவை இவற்றில் அதிகம். இந்த இரு சத்துகளும் நம் செரிமான மண்டலத்திற்கு நன்மை செய்கின்றன. வைட்டமின்கள் ஏ, பி, சி, இ மற்றும் மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் (ஸிங்க்) ஆகிய தாதுக்கள் இவற்றில் உள்ளன. வரம் பருப்பு, பாசிப் பருப்பு, பச்சை பயிறு, மைசூர் பருப்பு, கொண்டை கடலை, கடலை பருப்பு, சிவப்பு காராமணி, தட்டைப் பயிறு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சிறு தானியங்கள்: அரிசி மற்றும் கோதுமைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் மற்ற தானியங்களுக்குக் கொடுப்பதில்லை என்பதே உண்மை. ஆனால், சிறுதானியங்களே நமக்கு அதிக நன்மை செய்பவையாகும். கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு ஆகியவை சிறுதானியங்களாகும். கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து இவற்றில் அதிகம் காணப்படுகின்றன. செரிமான மண்டலத்திலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு இவை உதவுவதோடு, மலச்சிக்கல், பெருங்குடல் புற்றுநோய் இவற்றையும் தடுக்கிறது.

மசாலா பொருட்கள்: மஞ்சள், இலவங்க பட்டை, வெந்தயம், கறுப்பு மிளகு போன்ற மசாலா பொருள்களும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யக்கூடியவை. இவற்றில் அழற்சிக்கு எதிராக செயல்படும் திறன் உள்ளது. பாக்டீரியாக்களுக்கு எதிராகவும் இவை வேலை செய்கின்றன. ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களும் இவற்றில் உள்ளன. இவை உடலில் அழற்சியை குறைப்பதோடு, காயங்களையும் ஆற்றுகின்றன. உடலுக்கு நிலையற்ற அணுக்களான ஃப்ரீரேடிகல்களால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்துகின்றன.

இதையும் படியுங்கள்:
முதுமையை தாமதப்படுத்தும் பெண்களுக்கான 7 ஆரோக்கிய பழக்கங்கள்!
Do you know which are the simple foods that keep the body healthy?

வெள்ளைப் பூண்டு: வெள்ளைப் பூண்டு நெடி மிக்கதாக இருந்தாலும், நல்ல சுவை கொண்டது. எந்த உணவுக்கும் இது சுவையூட்டக்கூடியது. மருத்துவ குணங்களும் நிறைந்தது. உயர் மற்றும் குறை இரத்த அழுத்த பாதிப்புகளை இது குணமாக்கும். அதிக கொலஸ்ட்ராலை குறைக்கும். இதய பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பையில் நார்த்திசுக் கட்டிகள் உருவாகாமல் பாதுகாக்கிறது. இதிலுள்ள கந்தகம் (சல்பர்) நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.

தயிர்: தயிரில் அதிக புரதம் உள்ளது. வயிற்றில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு தயிர் உதவுகிறது. கால்சியம் (சுண்ணாம்புச் சத்து), வைட்டமின்கள் பி2, பி12, பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய சத்துகள் தயிரில் அடங்கியுள்ளன. செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை காப்பதுடன், மன அழுத்தத்தை குறைத்து ஆபத்தான நோய்கள் அண்டாமல் காக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com