சம்பளமாகக் கொடுக்கப்பட்ட ஊட்டச்சத்துமிக்க காய் எது தெரியுமா?

Do you know which vegetable is given as salary?
Do you know which vegetable is given as salary?https://ayurvedham.com

கிப்து நாட்டின் பிரசித்தி பெற்ற பிரமிட்களை கட்டிய தொழிலாளர்களுக்கு முள்ளங்கியே சம்பளமாகக் கொடுக்கப்பட்டது. காரணம், கடினமாக உழைக்கும் தொழிலாளர்களுக்கு அது ஆற்றலை வழங்கியதால்தான்.

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் முக்கியமான ஒன்று முள்ளங்கி. இது உணவில் சுவையை கூட்டுவது மட்டுமில்லாமல், உடலுக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. முள்ளங்கியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், வைட்டமின் சி நல்ல ஆதாரமாகவும் உள்ளது. முள்ளங்கியில் ஃபோலேட், வைட்டமின் பி6, பொட்டாசியம் போன்ற நுண்ணூட்டச் சத்துகளும் நிறைந்துள்ளன .மாங்கனீசு, கால்சியம் மற்றும் மிகக் குறைந்த புரதம் இருக்கும் அதேவேளையில் இதில் கொழுப்பு இல்லை.

இரவில் அதிக தொலைவு பயணம் செய்கிறவர்கள், தண்ணீர் குறைவாக குடிப்பவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் முள்ளங்கி சாறு சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். ஆண்களின் பாலியல் பிரச்னைகளுக்கு, மாதவிடாய் கோளாறுகளுக்கும் கூட முள்ளங்கி சாறு நல்லது. ஜீரண மண்டலத்தில் மாற்றம் கொண்டு வர உதவும் காய் முள்ளங்கி. அமிலத் தன்மையை காரத்தன்மையாக மாற்றும் ஆற்றல் உடையது. செரிமான பிரச்னைகள் வராமல் இருக்க புத்த பிட்சுகள் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவார்கள்.

ஒரு துண்டு முள்ளங்கியை நன்கு கழுவி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து சாறு எடுத்து வடிகட்டி காலை ஒரு நேரம் சாப்பிட மலச்சிக்கல் பிரச்னை தீரும். நெஞ்சு எரிச்சல், வயிறு உப்புசம் தீர வாரம் ஒரு முறையாவது 100 கிராம் முள்ளங்கி சாப்பிட வேண்டும். முள்ளங்கியை இரவில் சாப்பிடக் கூடாது. சிறுநீரகத்தை காப்பாற்றும் ஒரு ஆற்றல் மிக்க காய் முள்ளங்கி சிறுநீர் தாராளமாக பிரியவும், சிறுநீரகக் கல் அடைப்பு சரியாகவும் அடிக்கடி உணவில் முள்ளங்கியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மழைக்காலத்தில் ஆரோக்கியமான உணவுக்கு முள்ளங்கி சிறந்தது. இதன் ஆன்டி-கான்ஜெஸ்டிவ் பண்புகள் குளிர்காலத்தில் சளி மற்றும் இருமல் ஆகியவற்றிலிருந்து உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. சளியை அகற்ற இது உதவுகிறது. மழைக்காலத்தில், மக்கள் போதுமான தண்ணீர் குடிக்க மாட்டார்கள். எனவே, முள்ளங்கி குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.

முள்ளங்கியில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது, இது உங்களை நீண்ட நேரம் நிறைவாக உணர வைத்து, உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. முள்ளங்கியில் பொட்டாசியம் நிரம்பியுள்ளது. பொட்டாசியம் இரத்த நாளங்களை தளர்த்தி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்பதால், உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் நல்லது.

முள்ளங்கியில் துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன. இது பல்வேறு சருமக் கோளாறுகளைத் தடுக்கும். முள்ளங்கியை பச்சையாக சாப்பிடுவது, சிறந்த செல் உற்பத்திக்கு உதவுகிறது, உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் உங்கள் சருமம் இயற்கையாக பளபளப்பாக இருக்கும்.

முள்ளங்கியில் இண்டோல் 3, கார்பினோல் மற்றும் மெத்தில்தியோ, க்பியூடெனைல் , ஐசோதியோசயனேட் உள்ளது. இது கல்லீரலை சேதத்திற்கு எதிராக குணமடைய உதவுகிறது. இதனால் முள்ளங்கி நமது கல்லீரல் மற்றும் வயிற்றில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது மற்றும் மஞ்சள் காமாலைக்கு முக்கிய காரணமான பிலிரூபின் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

முள்ளங்கியில் குளுக்கோசினோலேட் மற்றும் ஐசோதியோசயனேட் போன்ற இரசாயன கலவைகள் உள்ளன. இவை இரத்த சர்க்கரையை இரத்தத்தில் உறிஞ்சுவதை கட்டுப்படுத்த உதவும். முள்ளங்கியில் கோஎன்சைம் க்யூ 10 நிறைந்துள்ளது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது நீரிழிவு நோயின் உருவாக்கத்தைத் தடுப்பதன் மூலம் அதன் வளர்ச்சியைத் திறம்பட தடுக்கிறது.

முள்ளங்கி கர்ப்பத்திற்கு நன்மை பயக்கும். ஏனெனில், அதில் பி6 வைட்டமின்கள் மற்றும் துத்தநாகம் உள்ளது. அவை குமட்டலைக் குறைக்கும். கூடுதலாக, அவை ஏராளமான வைட்டமின் ஏ கரோட்டினாய்டுகள், வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் உணவு நார்ச்சத்துக்கள் ஆகியவற்றை கொண்டிருகின்றன. முள்ளங்கி சாற்றில் கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் அடிக்கடி, ‘அபார்ஷன்’ ஏற்படுகின்றவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

காதினுள் இருக்கும் ஒலி வாங்கி நல்ல நிலையில் இயங்க வேண்டுமெனில் அதற்கு சிலிக்கான் மற்றும் அயோடின் சத்து தேவை. இவை இரண்டும் முள்ளங்கியின் தோல் பகுதியில் உள்ளது. எனவே, முள்ளங்கியை தோலுடன் சாப்பிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மூவாயிரம் அடி உயர மலை மேல் அருளும் ஒற்றைத் தந்த விநாயகர்!
Do you know which vegetable is given as salary?

முள்ளங்கி சாப்பிட்ட உடனேயே பால் குடிப்பதால், முள்ளங்கியில் உள்ள வைட்டமின் சி காரணமாக நெஞ்செரிச்சல், ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் வயிற்று வலி போன்றவை ஏற்படும். வெள்ளரிக்காயை முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. முள்ளங்கியுடன் ஆரஞ்சு பழங்களை சாப்பிட கூடாது. வயிற்றுக் கோளாறுகளை சந்திக்க நேரிடும்.

முள்ளங்கி வேர் காய்கறி குடும்பத்தைச் சேர்ந்தது. மாவுச்சத்து இருப்பதால் பல நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிடுவதில்லை. ஆனால், முள்ளங்கியில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். இரைப்பை குடல் அமைப்பை சீர்குலைக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், முள்ளங்கி குடலைச் சுத்தப்படுத்தவும், அமிலத்தன்மை மற்றும் வயிற்று உபாதைகளைத் தவிர்த்து ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com