ஒருபோதும் பச்சையாக சாப்பிடக்கூடாத காய்கறிகள் எவை தெரியுமா?

Cabbage
Cabbagehttps://www.herzindagi.com

கேரட் போன்ற சில காய்கறிகள் பச்சையாக சாப்பிட ஏற்றவை. ஆனால், எல்லாக் காய்கறிகளையும் சமைக்காமல் சாப்பிடக் கூடாது. அவை ஆரோக்கியக் குறைபாடுகளை ஏற்படுத்தும். எந்தக் காய்கறிகளை பச்சையாக சாப்பிடக் கூடாது, அதற்கான காரணங்கள் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கை ஒருபோதும் பச்சையாக சாப்பிடக் கூடாது. அதில் செலனைன் என்கிற ஒரு நச்சுப் பொருள் உள்ளது. அதை பச்சையாக சாப்பிடும்போது வாந்தி, மயக்கம் தலைவலி மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் வரும். இதை சமைத்து உண்ணும்போது செலனைன் நச்சு மறைந்து சாப்பிட ஏற்றதாக மென்மையாக மாறுகிறது.

சேனைக்கிழங்கு: உருளைக்கிழங்கைப் போலவே சேனைக்கிழங்கிலும் செலனைன் உள்ளது. பச்சையாக சாப்பிடும்போது வாய் முழுவதும் அரிப்பும் செரிமான கோளாறும் ஏற்படும்.

கிட்னி பீன்ஸ்: ராஜ்மா எனப்படும் கிட்னி பீன்ஸை பச்சையாக சாப்பிடக்கூடாது. வாந்தி, மயக்கம் வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும். முறையாக சமைத்து சாப்பிட்டால் மட்டுமே உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

புரோக்கோலி: புரோக்கோலியை சமைக்காமல் சாப்பிடும்போது தைராய்டு சம்பந்தமான பிரச்னைகள் மற்றும் செரிமானக் கோளாறுகள் வரும். எனவே சமைத்து உண்டால் மட்டுமே ஆரோக்கியம்.

முட்டைக்கோஸ்: முட்டைக்கோஸ் இலைகளை லேசாக வறுத்து சாலட் மற்றும் சாண்ட்விச்களில் பயன்படுத்தலாம். ஆனால் இதை பச்சையாக உண்ணக்கூடாது. ஏனெனில் இது மிகவும் கெடுதல் செய்யும் பாக்டீரியாவான ஈ கோலி போன்றவற்றை உருவாக்கும். இதை சமைத்து உண்ணும்போது ஈ கோலி போன்ற பாக்டீரியா தாக்க வாய்ப்பு இல்லை.

பசலைக்கீரை: இதுவும் முட்டைக்கோஸ் போன்றே நிறைய சத்துக்கள் நிறைந்திருந்தாலும், பச்சையாக உண்டால் பாக்டீரியாவை உற்பத்தி செய்து வயிற்று வலி, செரிமானக் கோளாறு போன்றவற்றை உருவாக்கும். எனவே. சமைத்து உண்ணும்போது இவை அழிந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
மருந்தாக உண்ண உகந்த பத்து மலர்கள்!
Cabbage

குடைமிளகாய்: இவற்றின் விதைகளில் நாடாப்புழுக்களின் முட்டைகள் இருக்கலாம். எனவே இவற்றை சமைத்து சாப்பிட வேண்டும்.

கத்தரிக்காய்: கத்தரிக்காயில் உள்ள சில சேர்மங்கள் பச்சையாக சாப்பிடும்போது கசப்பான உணர்வை தோற்றுவிக்கும். மேலும், இது செரிமான பிரச்னையையும் நரம்பு சார்ந்த சிக்கல்களையும் கொண்டு வரும். எனவே, இவற்றின் முறையாக சமைத்து சாப்பிடுவதே நல்லது. பாதி வேக்காட்டில் எடுக்கக் கூடாது. முழுமையாக சமைத்து உண்பதே நல்லது.

காலிஃப்ளவர்: இதில் உள்ள சில சேர்மங்கள் தைராய்டு சம்பந்தமான பிரச்னையை ஏற்படுத்தும். மேலும், இதில் உள்ள கார்போஹைட்ரேடுகள் பச்சையாக இவற்றை உண்ணும்போது செரிமான பிரச்னை, வயிற்று உப்புசம், வாய்வு தொந்தரவுகள் மற்றும் வயிற்று வலி ஏற்படுத்தும். முறையாக இதை சமைத்து உண்பதே நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com