கைவிரல் நகத்தை வைத்து ஒருவரின் குணநலனை கண்டறிவது எப்படி தெரியுமா?

Do you know how to find someone's character by looking at fingernails?
Do you know how to find someone's character by looking at fingernails?https://mathiyalagi.blogspot.com

வ்வொருவருடைய நக அமைப்பும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிலருக்கு வளைந்த நகங்கள், சிலருக்கு நீளமாகவும், சிலருக்கு வட்டமாகவும், சிலருக்கு சதுர வடிவிலும் இருக்கும். அதற்கேற்ப அவரவர்களுடைய குணாதிசயங்களும் இருக்கும்.

1. நீளமான நகங்களை கொண்டவர்கள்:  நீளமாக நகம் வைத்திருப்பவர்களுக்கு இயற்கையிலேயே கலைத்தன்மை கொண்ட குணம் இருக்கும். பிறர் எப்படி உடை அணிந்திருக்கிறார்கள், உணவு உண்ணும் ஸ்டைல் போன்றவற்றை கூர்ந்து கவனிப்பார்கள். ஆனால், அவர்களுடைய வெளிப்புற தோற்றத்தை விட அவர்கள் செய்யும் செயல்களுக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். நல்ல கற்பனைத் திறம் மிக்கவர்கள். கிரியேட்டிவ்வாக பல விஷயங்களை செய்வார்கள். இவர்களுடைய வலது மூளை நன்றாக செயல்படும். சில நேரங்களில் சூழ்நிலையின் காரணமாக பிறரை எளிதாக நம்பி விடுவார்கள். எனவே, மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் இவர்கள் இருக்க வேண்டும்.

https://tamil.news18.com

2. அகலமான நகங்களைக் கொண்டவர்கள்: இவர்கள் வெளிப்படையாக எதையும் பேசும் குணம் உடையவர்கள். இடது மூளை நன்றாக இவர்களுக்கு வேலை செய்யும். நன்றாகப் பேசக்கூடியவர்கள். மனதில் நினைக்கும் எண்ணங்களை அழகான வார்த்தைகளால் வெளிப்படுத்தத் தெரிந்தவர்கள். நேர்மையான குணம் உடையவர்கள். முடிவெடுப்பதில் வல்லவர்கள். ஆனால், இவர்களுக்கு சகிப்புத்தன்மை குறைவு மற்றும் எளிதில் கோபப்படக் கூடியவர்கள். பிறருடைய உணர்ச்சிகளை புரிந்து கொள்வதில் தடுமாறுவார்கள்.

3. வட்ட வடிவமான நகங்களை உடையவர்கள்: எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பவர்கள் இவர்கள். அதிர்ஷ்டமும் எப்போதும் இவர்களுக்கு துணை இருக்கும். தனக்கு ஏற்ற விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்புவார்கள். பலர் கூடியுள்ள இடத்தில் எளிதில் பிறரை கவர்ந்து விடுவார்கள். கூட்டத்தில் யாராவது சண்டை போட்டுக் கொண்டால் அவர்களை சமாதானம் செய்து அமைதியை நிலைநாட்டுவதில் வல்லவர்கள். எந்தவிதமான புதிய மனிதர்களையும் அழகாக கையாளத் தெரிந்தவர்கள். புதிய சூழலில் நன்றாக தங்களைப் பொருத்திக்கொள்ள இவர்களால் முடியும். அதேசமயம் தனக்கு ஒத்துவரவில்லை என்றால் எதை வேண்டுமானாலும் மாற்றி விடுவார்கள். அசாத்திய துணிச்சல் நிறைந்தவர்கள்.

இதையும் படியுங்கள்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில ஆயுர்வேத மூலிகை பலன்கள்!
Do you know how to find someone's character by looking at fingernails?

4. சதுர வடிவ நகங்களை உடையவர்கள்: இவர்கள் துணிச்சலுக்கு பெயர் போனவர்கள். யாருக்கும் எதற்கும் பயப்பட மாட்டார்கள். துணிந்து செயலில் இறங்குவார்கள். விடாமுயற்சியுடன் காரியங்களை ஆற்றுவார்கள். பிடிவாதம் நிறைந்தவர்கள். யாருக்காகவும் வளைந்து கொடுக்காத தன்மை உள்ளவர்கள். அதனால் இவரிடம் நெருங்க பலர் தயங்குவார்கள். இவர்களுடைய பல நல்ல குணங்கள் பிடிவாதம் மற்றும் வளைந்து கொடுக்காத தன்மையால் மனிதர்களை இவர்களிடம் இருந்து தூர வைக்கும். இதை மாற்றிக்கொண்டால் இவர்கள் நிறைய நண்பர்களையும் உறவுகளையும் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com