
பழங்கள் என்றாலே வைட்டமின் சத்துக்களுக்காக எடுக்கப்படுவது என்று தெரியும். எந்த மருத்துவரிடம் சென்றாலும் முதலில் சொல்வது நன்றாக பழம், காய்கறிகள் உண்ணுங்கள் என்பதுதான். அப்படி தான் பலரும் தினசரி பழங்களை சாப்பிட்டு வருகிறோம். இந்த நிலையில், நாம் தினமும் சாப்பிட்டு வரும் ஒரு பழத்தை மனித சதை உண்ணும் பழம் என்று சொல்கிறார்கள் தெரியுமா? அது எந்த பழம் ஏன் அப்படி கூறுகிறார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அது அன்னாச்சி பழம் தான். அன்னாச்சி பழ பிரியர்களுக்கு இது அதிர்ச்சியாக தான் இருக்கும். ஆனால் ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அன்னாசிப்பழம், தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இனிப்பும் புளிப்பும் கலந்த இந்தப் பழம், சந்தைகளில் எளிதில் கிடைக்கிறது. வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த அன்னாசிப்பழம், பல உடல்நல நன்மைகளை வழங்குகிறது. ஆனால், அன்னாசிப்பழம் 'மனித சதையை உண்ணும் பழம்' என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம், இதில் உள்ள ப்ரோமெலைன் எனும் நொதி. ப்ரோமெலைன் புரதத்தை உடைக்கும் நொதி. இது இறைச்சியை மென்மையாக்க பயன்படுகிறது.
அன்னாசிப்பழம் சாப்பிடும் போது, இந்த ப்ரோமெலைன் நமது நாக்கில் உள்ள புரதங்களை உடைக்கிறது. இதனால் லேசான கூச்ச உணர்வு ஏற்படுகிறது. இதையே, 'மனித சதையை உண்ணும் பழம்' என்று அழைக்கிறார்கள். இப்படி ஒரு ஸ்பெஷல் இந்த பழத்தில் இருப்பது பெரிதும் தெரிந்திருக்காது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எடையைக் குறைக்கவும், கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் அன்னாசிப்பழம் உதவுகிறது. வைட்டமின்கள் ஏ, கே, பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அன்னாசிப்பழம், புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது. உங்கள் டயட்டில் அன்னாச்சி பழத்தையும் சேர்த்தால் எளிதில் எடையை குறைக்கலாம் எனவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.