பிங்க் நிற பதிமுகம் கேரளாவில் ஏன் பிரபலம் தெரியுமா?

Do you know why pink colour pathimugam is popular in Kerala?
Do you know why pink colour pathimugam is popular in Kerala?https://www.youtube.com

கேரளாவிற்கு செல்லும்போது பார்த்தோமென்றால், நிறைய வீடுகளில் ‘பிங்’ நிறத்தில் தண்ணீர் குடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். முக்கியமாக, கோடைக்காலத்தில் இதை அதிகம் அருந்துவார்கள். அது என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் எப்போதாவது உங்களுக்கு எழுந்திருக்கிறதா? அந்த பானத்தின் பெயர்தான், பதிமுகமாகும்.

பதிமுகம் என்பது ஒருவகை மூலிகையிலிருந்து எடுக்கப்படும் பட்டையாகும். இந்தப் பட்டையை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்தால், ‘பிங்’ நிறத்தில் தண்ணீர் மாறிவிடும். பதிமுகத்தில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடன்ட் இருக்கிறது. மற்றும் இது ஜீரணத்திற்கு அதிகம் உதவுகிறது. கேரளாவில் இந்த நீர் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பதிமுகத்தை அருந்துவதால் அதிகப்படியான தண்ணீர் தாகத்தை கட்டுப்படுத்துகிறது.

பதிமுகம் நம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியதாகும். கோடைக்காலங்களில் இந்த நீரை அதிகம் பயன்படுத்துவர். இதற்கு அழற்சி எதிர்ப்பு குணங்களும் உள்ளன. எனவே, பாக்டீரியா மற்றும் பேரஸைட்களை எதிர்த்து போராடும். சரும நோய் மற்றும் மூட்டு வலியை இது குணமாக்கும். பதிமுகம் அருந்துவதால் முகப்பருக்கள் குணமாகும். இது வலிப்பு நோயை குணப்படுத்தும். இதயத்திற்கும் மிகவும் நல்லதாகும்.

‘சப்பான்’ என்று அழைக்கப்படும் இந்த மரமானது, இந்தியா - மலேசியாவை பூர்வீகமாகக் கொண்டதாகும். கேரளாவில் உள்ள காலநிலையில் இந்த மரம் நன்றாகவே வளரக்கூடியதாகும். இம்மரம் காட்டில் வேலி போல வளர்ந்து காட்டு விலங்குகளைப் பாதுகாக்கும்.

இதிலிருந்து வரும் சிவப்பு நிறம் இயற்கையான சாயமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதை சில்க் மற்றும் காட்டனில் சிவப்பு நிற சாயத்திற்கு பயன்படுத்துவார்கள். அது மட்டுமில்லாமல், இதை புட் கலராகவும் பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சாதாரண நாட்டு மருந்து கடைகளிலேயே இது கிடைக்கும். இந்தப் பட்டையை கொதிக்கும் நீரில் போட்டு வடிக்கட்டி எடுத்துவிட வேண்டும். பதிமுகத்தை சூடாகக் குடிப்பதே சிறந்ததாகும். பதிமுகத்தின் அரை தேக்கரண்டி பட்டையை 4 லிட்டர் தண்ணீருக்கு பயன்படுத்துவது சரியாக இருக்கும்.

பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் பதிமுகத்தில் இப்போது பிளேவர்ஸ் சேர்த்து கொள்ளப்படுகிறது. இதோடு, கொத்தமல்லி விதை, இஞ்சி, ஏலக்காய் போன்றவையும் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சுத்தமான வெல்லத்தை கண்டுபிடிப்பது எப்படி?
Do you know why pink colour pathimugam is popular in Kerala?

பதிமுகத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டான சாப்போனின் இருக்கிறது. இது பார்க்கின்சன், அல்ஸிமர் நோய் போன்றவற்றை தடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தி சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சூடாக பதிமுகத்தை அருந்துவதால் மாதவிலங்கு வலியில்லாமல் இருக்கும். இதை அருந்துவதால் கேன்சர் வராமல் தடுக்கும், முக்கியமாக, பெருங்குடல், மலக்குடல் புற்றுநோயை வர விடாமல் தடுக்கும்.

இம்மரம் செம்மண் அதிகம் இருக்கக்கூடிய இடத்தில் வளரும். பதிமுகத்தை அருந்துவதால் தண்ணீர் தாகம் அதிகம் எடுப்பதைக் குறைக்கும். இரத்தத்தை சுத்திகரிக்கும், சருமத்தை பளபளப்பாக்கும், வலிப்பு, அலற்சி போன்றவற்றை குணப்படுத்தும். பதிமுகத்தை தினமும் குடிப்பதால் வயிற்றில் உள்ள அல்சரை போக்கும் என்பது குறிப்பிடத்தக்தாகும்.

எனவே, இந்த அருமருந்தான பதிமுகத்தை கோடைக்காலத்தில் வீட்டிலேயே செய்து அருந்தி பயன் பெறுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com