பயறு வகைகளை ஏன் முளைக்கட்டி சாப்பிடுகிறோம் தெரியுமா?

Health benefits of sprouted grains
Health benefits of sprouted grains
Published on

யறு வகைகளை சாதாரணமாக உணவில் எடுத்துக் கொள்வதற்கு பதில் அதை முளைகட்டிய பயறாக எடுத்துக் கொள்வதில் ஏராளமான ஊட்டச்சத்தும், ஆரோக்கிய பலன்களும் உள்ளன. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

காலையில் ஒரு சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது மாலை நேரத்தில் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் வேண்டும் என்று நினைத்தால், கண்டிப்பாக முளைக்கட்டிய பயறை தேர்வு செய்வது சிறந்த சாய்ஸ் ஆகும்.

முளைக்கட்டிய பயறை வேக வைத்து அதனுடன் வெங்காயம், தக்காளி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து சாப்பிடும்போது மிகவும் சுவையாக இருக்கும். முளைக்கட்டிய பயறில் அதிகமாக நார்ச்சத்தும், புரதச்சத்தும் இருக்கிறது. அதுவும் வேக வைக்காமல் பச்சையாக சாப்பிடும்போது அதிகமான வைட்டமின், புரதம், கால்சியம், மினரல்ஸ் என்று ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன.

முளைக்கட்டிய பயறு மிகவும் எளிதாக ஜீரணம் ஆகக்கூடிய உணவாகும். முளைக்கட்டிய பயறில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும், இதை சாப்பிடுவதால் வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து பசியைக் குறைக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், மலச்சிக்கல் உள்ளவர்கள் நார்ச்சத்து உள்ள உணவை எடுத்துக்கொள்வது நல்லதாகும்.

அதற்கு ஒரு நல்ல தேர்வாக முளைக்கட்டிய பயறை சொல்லலாம். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், மீன், முட்டை, இறைச்சி பிடிக்காதவர்கள் முளைக்கட்டிய பயறை அதற்கு பதிலாக எடுத்துக் கொள்ளலாம். அதில் கிடைக்கக்கூடிய புரதச்சத்துக்களை இதன் மூலமாகப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
பனங்கிழங்கு சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
Health benefits of sprouted grains

பழங்களைக் காட்டிலும் முளைக்கட்டிய பயறில் அதிகமாக நார்ச்சத்து உள்ளது. எனவே, பழங்களின் விலை காரணமாக அதை வாங்க யோசிப்பவர்கள் கூட முளைக்கட்டிய பயறை எடுத்துக் கொள்ளலாம். பழங்களுக்கு பதில் இது ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.

உடல் பலத்தை அதிகரிக்க விரும்புவோர் இதை எடுத்துக் கொள்ளலாம். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரோபயாட்டிக் பண்புகள் இந்த முளைக்கட்டிய பயறில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே, இனி சத்தான ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் முளைக்கட்டிய பயறை முயற்சித்துப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com