
கீரைகள் ஒரு சிறந்த உணவாகும். இதில் கொலஸ்ட்ரால் குறைவு. நியாசின், துத்தநாகம், புரதம், நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றது.
கீரையில் உள்ள பிளோவினாய்டுகள் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைத்து நிறைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.
கீரைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், இது மலச்சிக்கல் பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. கீரையில் உற்ற கொலஸ்ட்ரால் குறைக்கும் பண்புகள் உடல் எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.
நம் உடலில் ரத்தம் அதிகரிக்கவும், ரத்தத்தை சுத்தப்படுத்தவும், ரத்தத்தில் இருக்கும் கிருமிகளை அழிக்கவும் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
கீரையில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதன் காரணமாக ரத்தசோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
கீரையில் உள்ள கரோட்டின் என்ற பொருள் தான் வைட்டமின் ஏ ஆக மாறுகிறது. இதனால் பார்வை இழப்பு தடுக்கப்பட்டு பார்வை நன்றாக தெரிய உதவுகிறது. ஆகவே, கீரையில் உள்ள கரோட்டின்களை பாதுகாக்க அதை அதிக நேரம் வேகவைப்பதை தவிர்ப்பது நல்லது.
மூளையை சிறந்த நிலையில் வைத்திருப்பது நம்முடைய உடல் நலனையும், மனதையும் மகிழ்ச்சியாக வைக்க உதவுகிறது. மூளையை இளமையாக வைக்க கீரை உதவுகிறது.
பச்சை கீரைகளில் நைட்ரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. தினமும் 100 முதல் 140 மில்லி கிராம் அளவு நைட்ரேட் சத்துக்கள் நிறைந்த கீரைகளை எடுத்துக்கொள்வதால், ஐம்பது வயதிற்கு மேல் ஏற்படும் பார்வை இழப்பு தடுக்கப்படுவதாக ஆய்வின் மூலமாக தெரிய வந்துள்ளது.
புளிப்புத்தன்மை வெளியேறாமல் வயிற்றில் தங்கிவிடுவது தான் பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது. கீரையில் உள்ள காரத்தன்மையானது உடலில் உள்ள புளிப்புத்தன்மைக் கொண்ட கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
தினமும் உணவில் சேர்த்து சாப்பிட வேண்டிய கீரையின் அளவு: பெண்கள் 100 கிராம், ஆண்கள் 80 கிராம், குழந்தைகள் 50 கிராம் எடுத்துக் கொள்வது நல்லது.
எனவே, கீரைகளை அலட்சியப்படுத்தாமல் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.