உங்க ஸ்கின் ஏன் கருப்பா ஆகுது தெரியுமா? குளியல் பிரஷ்ஷின் பயங்கரமான மறுபக்கம்!

bathing brush disadvantage
Bathing brush
Published on

டலில் உள்ள அழுக்குப் போக குளிக்கிறேன் பேர்வழி என்று பீர்க்கங்காய் நார், ஓடு அல்லது கடினமான பிரஷ்(bathing brush) போட்டு குளிப்பவர்கள் நிறைய பேர் உண்டு. அதனால் சருமத்துக்கு எத்தனை பாதிப்புகள் உண்டாகிறது என்று தெரிந்தால் அவற்றை பயன்படுத்த மாட்டார்கள்.

குளியலுக்கு பயன்படுத்தும் சோப்பு தீர்ந்துவிட்டதா? உடனே வாங்க...

நார், பிரஷ் போட்டு குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:

எரிச்சல் மற்றும் சிவத்தல்: கடினமான பிரஷ் மற்றும் நார் போட்டு குளிக்கும்போது சருமத்தில் சிராய்ப்பு ஏற்பட்டு எரிச்சல் உண்டாகும். மேலும் சருமமும் சிவந்து போகும்.

மைக்ரோடியர்ஸ்: பிரஷ் மற்றும் நார் சருமத்தில் மைக்ரோடியர்ஸ் எனப்படும் பாதிப்பை உண்டாக்கும். மைக்ரோடியர்ஸ் என்பது அதிகப்படியான உராய்வு அல்லது அழுத்தம் காரணமாக சருமத்தில் ஏற்படும் கண்ணீர். இது பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாது. இது சரும வீக்கத்திற்கு வழி வகுக்கலாம். இதனால் எளிதாக சருமத்தொற்று நோய்க்கு ஆளாக நேரிடும். இந்த சிறிய கண்ணீர் பாக்டீரியா மற்றும் பிற நோய்க்கிருமிகளுக்கு நுழைவு புள்ளிகளாக செயல்படும்.

இயற்கையான எண்ணெய் அகற்றம்: பிரஷ் மற்றும் நாரைப் போட்டு தேய்த்து குளிக்கும்போது சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை அகற்றப்பட்டு வறட்சி மற்றும் பலவீனமான சரும அமைப்பிற்கு வழிவகுக்கும்.

சரும அழற்சி: முகப்பரு, ரோசாசியா அல்லது அரிக்கும் சரும அழற்சி போன்றவை ஏற்படும். அதனால் எப்போதும் சருமம் எரிச்சலாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும்.

முதுமை தோற்றம்: தொடர்ச்சியாக நார் மற்றும் பிரஷ் பயன்படுத்தி வரும்போது அது சருமத்தின் மேற்பரப்பில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை ஏற்படுத்தும். அதனால் பார்ப்பதற்கு வயதானவர் போல தோற்றம் அளிக்க நேரிடும். மேலும், சருமம் காலப்போக்கில் அதன் நெகழ்ச்சித்தன்மையை இழக்கும். அதனால் முன்னதாகவே வயதுக்கு மீறிய முதுமை உண்டாகும்.

கருமையான சருமம்: சரும அழற்சி மிக விரைவில் ஹைப்பர் பிக்மென்ட்டேஷன் எனப்படும் அதீத கருமைக்கு வழிவகுக்கும். குறிப்பாக கருமை நிறம் உடையவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். உடையும் நுண்குழாய்கள் பிரஷ் மற்றும் நார் போட்டு அதிகப்படியான அழுத்தம் கொடுத்து தேய்க்கும்போது அவை சருமத்தில் உராய்வை ஏற்படுத்தும். அது சருமத்தில் உள்ள நுண்குழாய்களை உடைத்து சிவப்பு நிறத்தில் கோடுகள் மற்றும் புள்ளிகளை ஏற்படுத்தும்.

அதிகரித்த உணர்திறன்: நாளடைவில் சருமத்தின் சென்சிடிவிடி எனும் உணர்திறன் பாதிப்படையும். இயற்கையான தடையை சீர்குலைத்து பாக்டீரியாக்கள் நுழைய வழிசெய்யும். மேலும், உடலின் நீர்த்தன்மை இழப்பிற்கு வழிவகுக்கும். அதனால் நம் உடலுக்கு பாதுகாப்பு கவசமாக விளங்கும் சருமம், தனது செயல்திறனைக் குறைத்துக்கொள்ளும். மிக விரைவில் சரும நோய்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது போல ஆகிவிடும்.

முகப்பரு: சருமத்தை தொந்தரவு செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள இயற்கையான நுண்ணுயிர்கள் தொந்தரவுக்கு உள்ளாகும். அதனால் முகப்பரு அல்லது சரும ரீதியான பிரச்னைகள் ஏற்படும். ஏற்கெனவே முகப்பரு உள்ளவர்கள் பிரஷ் மற்றும் நாரை பயன்படுத்தும்போது இன்னும் நிலைமை மோசமாகும். ஆழமான வடு ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
ஏப்பம் தானேன்னு விட்டா அப்புறம் வருத்தப்படுவீங்க! உடனே இதை செக் பண்ணுங்க...
bathing brush disadvantage

எனவே, தினமும் குளிப்பவர்களுக்கு சோப்பு மட்டுமே போதும். வாரத்தில் இரண்டு முறை மிக மிக மென்மையான பிரஷ்களை உபயோகிக்கலாம். ஆனால், அவையும் அவசியம் அல்ல.

- டாக்டர் தி.ரா.ரவி

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

குளியலுக்கு பயன்படுத்தும் சோப்பு தீர்ந்துவிட்டதா? உடனே வாங்க...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com