உங்களுக்கு அடிக்கடி பதற்றம் ஏற்படுகிறதா? அப்போ இதை கண்டிப்பா செய்யுங்க!

How to control anxiety problems naturally?
How to control anxiety problems naturally?Image Credits: Verywell Mind

ம்முடைய உடலில் Stress ஏற்படும்போது அதைப் போக்குவதற்காக இயற்கையாகவே உருவாகக்கூடிய உணர்வுதான் பதற்றம். இது நம் மனதில் ஏற்படும் பயம் அல்லது கவலையின் வெளிப்பாடாகும். இது நம்முடைய ஜெனிட்டிக்ஸிலேயே இருக்கும் என்று கூறப்படுகிறது. பதற்றப்படும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும், மூச்சு விடுவது அதிகரிக்கும், அமைதியின்மை போன்ற அறிகுறிகள் தெரியும்.

இந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக மாறுபடும். சிலருக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு ஏற்படும், அரிப்பு, வியர்த்தல், கெட்ட கனவு, இருமல் போன்றவை ஏற்படும். இப்படி அடிக்கடி நடக்கும்போது அது Panic disorder, social anxiety disorder, Phobias போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும். எனவே, இயற்கையாகவே இந்தப் பதற்றத்தை போக்குவதற்கான வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. சுறுசுறுப்பாக இருப்பது: நம் உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதன் மூலம் பதற்றத்தை 60 சதவிகிதம் வரை குறைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதால், தேவையில்லாத யோசனை மனதில் ஏற்படாமல் தடுக்கலாம்.

2. புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை விடுதல்: அதிகப்படியாக குடிப்பது மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. இதனால் உணர்ச்சிகளில் பாதிப்பு ஏற்பட்டு பதற்றம் வருவதற்குக் காரணமாக அமைகிறது. வெகுநாட்களாக குடிப்பழக்கம், புகைப்பழக்கம் இருப்பவர்கள் அதை நிறுத்தும்போது அதிகமாகப் பதற்றம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. அதனால் புகை மற்றும் மதுவை எடுத்துக்கொள்வதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவது சிறந்தது. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் சிகரெட்டுக்கு பதிலாக Bubble gum மெல்வது சிறந்தது.

3. தூக்கத்தின் முக்கியத்துவம்: கண்டிப்பாக 7 மணி நேரமாவது தூங்க வேண்டியது அவசியமாகும். களைப்பாக இருக்கும்போது தூங்க வேண்டும். போன், டீவி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். தினமும் சரியான நேரத்திற்கு தூங்க வேண்டும். இரவு அதிகமாக காபி குடிப்பதை நிறுத்துவது போன்ற மாற்றங்கள் செய்வதால் நன்றாகத் தூக்கம் வரும்.

4. தியானம் செய்யலாம்: தியானம் செய்வதன் நோக்கம் மன அமைதி பெறுவதற்காகவும், மனதில் ஏற்படும் தேவையில்லாத எண்ணங்களையும், பதற்றத்தையும் கட்டுப்படுத்துவதற்காகவே ஆகும். தியானம் Stress and anxietyஐ போக்கும். எனவே, தியானம் செய்வது உடலுக்கும், மனதிற்கும் நிம்மதியைக் கொடுக்கும்.

5. சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது: குறைந்த இரத்த அழுத்தம், தண்ணீர் அதிகமாக எடுத்துக்கொள்ளாதது போன்றவை கூட நம் உணர்ச்சிகளை பாதிக்கும். அதனால் உணவில் அதிக காய்கறிகள், பழங்கள், புரதம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுதல் நல்லது.

6. மூச்சை நன்றாக இழுத்து விடுவது: மூச்சை நன்றாக ஆழமாக இழுத்து விடுவதற்கு பயிற்சி எடுத்துக்கொள்வது அவசியமாகும். அவ்வாறு செய்யும்போது பதற்றப்படும் சூழ்நிலையில் மூச்சை இழுத்துவிடும்போது அது பதற்றத்தைக் குறைக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
இந்த 7 விஷயத்தை மட்டும் செய்துபாருங்களேன்... அனைவருக்குமே உங்களைப் பிடிக்கும்!
How to control anxiety problems naturally?

7.அரோமா தெரபி: அரோமா தெரபி என்பது ஒரு ஹீலிங் முறையாகும். இது ஆயிரம் வருடங்களுக்கு மேல் உபயோகத்தில் உள்ளது. இயற்கையாக செடிகளில் இருந்து எடுக்கப்படும் சாறு மற்றும் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முறையாகும்.

8. Chamomile tea அருந்துவது: Chamomile teaல் apigenin என்னும் பதற்றத்தை குறைக்ககூடிய Compound உள்ளது. இதனால் இதை அருந்துவதால் நல்ல தூக்கம் வருவதோடு, பதற்றத்தை குறைத்து மனதை அமைதியாக்குகிறது. எனவே, இந்த டீயை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது. மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி அதிகமாக பதற்றம் அடைவதைக் குறைத்து, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com