ராத்திரி பூரா குறட்டை சத்தமா? விவாகரத்து வரைக்கும் போகாம இருக்க இதை ட்ரை பண்ணுங்க!

Snoring
Snoring
Published on

காலையிலிருந்து ஓடி ஓடி உழைத்துவிட்டு, ராத்திரி நிம்மதியா கண்ணை மூடினாலும், பக்கத்துல இருக்கறவங்க 'கர்... புர்...'னு டிராக்டர் ஓட்ட ஆரம்பிச்சிடுவாங்களே, அந்த கொடுமை அனுபவிச்சவங்களுக்குத்தான் தெரியும். வெளிநாடுகளில் நடந்த ஒரு ஆய்வில், கணவன்-மனைவி பிரிவுக்குக் குறட்டை ஒரு முக்கியக் காரணம்னு கண்டுபிடிச்சிருக்காங்கன்னா பார்த்துக்கோங்க, இது எவ்வளவு பெரிய பிரச்சனைனு. 

காதல் முக்கியம்தான், ஆனா தூக்கம் அதைவிட முக்கியம் இல்லையா? உங்க பார்ட்னர் விடும் குறட்டை சத்தத்துல இருந்து தப்பிச்சு, நீங்க எப்படி நிம்மதியா தூங்குறதுன்னு சில எளிய தந்திரங்களைப் பார்ப்போம்.

நீங்க முந்திக்கோங்க!

இதுதான் இருப்பதிலேயே ரொம்ப சிம்பிளான வழி. உங்க பார்ட்னர் படுக்கைக்கு வந்தவுடனே குறட்டை விட ஆரம்பிச்சிடுவார்னு உங்களுக்குத் தெரியும். அதனால, அவர் தூங்குறதுக்கு முன்னாடியே நீங்க தூங்கிடுங்க. உங்களுக்கு ஒரு ஆழ்ந்த உறக்கம் வந்த பிறகு, பக்கத்துல இடி இடிச்சாலும் பெருசா தொந்தரவு இருக்காது. அதனால, படுக்கைக்குச் சீக்கிரமா போற பழக்கத்தை ஏற்படுத்திக்கோங்க.

தலையணையை மாத்துங்க!

சில சமயம் தலை ரொம்பத் தாழ்வா இருந்தா, தொண்டைக் குழாயில் காத்து போறதுக்குச் சிரமமாகி, குறட்டை வரும். அதனால, உங்க பார்ட்னருக்கு இன்னொரு தலையணையை வெச்சு, தலையை கொஞ்சம் ஒயரமாத் தூக்கி வெச்சுப் படுக்கச் சொல்லுங்க. இது மூச்சுப் பாதை சீராக இருக்க உதவும். அதேபோல, மல்லாக்கப் படுத்தால்தான் குறட்டை அதிகம் வரும். அவங்களை ஒருக்களிச்சுப் படுக்கச் சொன்னா சத்தம் குறைய வாய்ப்பிருக்கு.

இதையும் படியுங்கள்:
காது குடைவதால் விளையும் விபரீதங்கள்!
Snoring

காதுக்கு Earplugs!

வேற வழியே இல்லைன்னா, கடையில விக்கிற நல்ல தரமான Earplugs வாங்கி மாட்டிக்கோங்க. சிலிக்கான்ல செய்யப்பட்ட மென்மையான பிளக்ஸ் காது வலி வராமலும் இருக்கும், வெளியில இருக்கிற சத்தத்தை உள்ளே விடாமலும் இருக்கும். இது ஒரு சின்ன முதலீடுதான், ஆனா பெரிய நிம்மதியைத் தரும்.

சத்தத்தை சத்தத்தால் அடக்குங்க!

அறை நிசப்தமா இருந்தாதான் குறட்டை சத்தம் பெருசா கேட்கும். அதனால ஃபேனை கொஞ்சம் வேகமா ஓட விடுங்க. அந்த ஃபேன் சத்தம், குறட்டை சத்தத்தை ஓரளவு அமுக்கிடும். இது உங்க மூளையைத் திசை திருப்பித் தூங்க வைக்கும்.

இதையும் படியுங்கள்:
குறட்டை: உடல் பருமனும் ஒரு காரணமோ?
Snoring

மருத்துவரிடம் போங்க!

எல்லாத்தையும் தாண்டி, குறட்டை என்பது சாதாரண விஷயம் இல்லை. அது மூச்சுத் திணறல் அல்லது வேறு ஏதோ உடல்நலக் கோளாறின் அறிகுறியா கூட இருக்கலாம். அதனால, உங்க பார்ட்னரைக் கூட்டிக்கிட்டு ஒரு நல்ல டாக்டரைப் பார்க்கறதுதான் நிரந்தரத் தீர்வு.

குறட்டை விடுபவர்கள் வேணும்னே அதைச் செய்யறது இல்லை. அது அவங்களையும் அறியாமல் நடக்குற விஷயம். அதனால கோபப்பட்டு சண்டை போடாம, மேலே சொன்ன சின்னச் சின்ன மாற்றங்களைச் செஞ்சு பாருங்க. தேவைப்பட்டா, படுக்கையில கொஞ்சம் இடைவெளி விட்டுப் படுங்க. நிம்மதியான தூக்கம் இருந்தாதான், மறுநாள் பொழுது விடியும்போது முகம் மலர்ச்சியா இருக்கும், உறவும் மகிழ்ச்சியா இருக்கும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com