தற்போதைய காலகட்டத்தில் செல்போன் இல்லாமல் இருப்பது பலருக்கும் கடினமான விஷயமாக இருக்கிறது. போனை சிறிது நேரம் கூட கீழே வைக்க மனமில்லாமல் 24 மணி நேரமும் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதிலும் இரவில் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இதனால் கண்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இரவில் போன் பயன்படுத்துவதால், உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. இரவில் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துவதால், அதிலிருந்து வரும் வெளிச்சம் காரணமாக மூளையில் மெலடோனின் என்னும் ஹார்மோன் சரியாக சுரக்காமல் தூக்கமின்மையை ஏற்படுத்தும். இதனால் உடல் சோர்வு, எரிச்சல் உண்டாகும்.
2. இரவில் அதிக நேரம் போன் பயன்படுத்திக்கொண்டு தூங்காமல் இருப்பது நெஞ்செரிச்சல், மாரடைப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
3. இரவில் தூங்காமல் மொபைல் போனை பயன்படுத்திவிட்டு காலையில் அதிக நேரம் தூங்குவதால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
4. இரவு நேரங்களில் மொபைல் பயன்படுத்துவதால், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துக்கொண்டே போகும். அதிகமாக இரவு போன் பயன்படுத்துவதால், கண் எரிச்சல், உடல் சூடு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
5. இரவு நேரத்தில் அதிகம் போனை பயன்படுத்துவதால், இது நம்முடைய உடலில் உள்ள circadian clock rhythmஐ பாதிக்கிறது. நம் உடலில் பெரும்பாலான வேலைகள் ஒழுங்காக நடப்பதற்கு இது முக்கியமாகும். நம்முடைய மனநிலை, பசி, மெட்டபாலிசம் போன்ற வேலைகள் உடலில் ஒழுங்காக நடைபெற இது பெரிதும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
6. இரவு தூங்க செல்லும்போது மொபைல் போனை அருகில் வைத்துத் தூங்காமல் 10 மீட்டர் இடைவேளையில் வைத்து தூங்குவது சிறந்தது. இரவில் போனை பயன்படுத்துவதை ஒதுக்கிவிட்டு இசை கேட்பது, பார்ட்னருடன் பேசுவது, மெடிடேஷன் போன்றவற்றை செய்வதின் மூலமாக ரிலாக்ஸாகி தூங்கலாம்.
7. போனில் இருந்து குறைந்த Radio frequency அலைகள் வருகிறது. இது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, போனை இரவில் பக்கத்தில் வைத்து தூங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அது மட்டுமில்லாமல், சில போன்கள் வெடிப்பதற்கான அபாயம் உள்ளது. இதனால் உடலில் மோசமான தீக்காயங்கள் உண்டாகும். இது உயிருக்கே ஆபத்தை விளைக்கும் அபாயமும் உண்டு. இதனால்தான் இரவில் போனை படுக்கை அருகில் வைத்துத் தூங்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது.