கைகள் அடிக்கடி மரத்துப் போகுதா? ஜாக்கிரதை! 

hands
Do your hands often go numb? Beware!
Published on

நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் பல சிறிய உடல் மாற்றங்களை கவனிக்காமல் போகலாம். ஆனால், சில மாற்றங்கள் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். அவற்றில் ஒன்றுதான் கைகள் அடிக்கடி மரத்துப்போவது. இந்தப் பிரச்சனை பலருக்கு ஏற்படும் பொதுவான ஒன்றுதான் என்றாலும், இதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். இந்தப் பதிவில் கைகள் அடிக்கடி மரத்துப் போவதற்கான காரணங்கள், இதனால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பார்க்கலாம். 

உடலின் மின்சாரம்: நரம்புகள் 

நம் உடலில் உள்ள நரம்புகள் மின்சாரம் கடத்தும் கம்பிகள் போல செயல்படுகின்றன. மூளை அனுப்பும் சிக்னல்களை உடலின் மற்ற பாகங்களுக்கு எடுத்துச் செல்வதும், உடலின் பல்வேறு பாகங்களில் இருந்து மூளைக்கு தகவல்களை எடுத்துச் செல்வதும் இந்த நரம்புகளின் பணி. இந்த நரம்புகள் சேதமடைந்தாலோ, அல்லது அழுத்தத்திற்கு உள்ளானாலோ, நம் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். கைகள் மரத்துப் போவதற்கு முக்கிய காரணம் நரம்புகளின் செயல்பாடு பாதிக்கப்படுவது. 

கைகள் மரத்துப்போவதற்கான காரணங்கள்: 

கைகளில் உள்ள நரம்புகள், எலும்புகள், தசைகள் அல்லது இணைப்பு திசுக்களால் அழுத்தப்படுவதால் கைகள் மரத்துப் போகலாம். மேலும், விட்டமின் பி12 குறைபாடு கைகள் மரத்துப் போவதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். 

கர்ப்ப காலத்தில் வளரும் குழந்தை காரணமாக, தாயின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், கைகள் மரத்துப்போவதற்கு வழிவகுக்கும். நீண்ட காலமாக சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு நரம்புகள் சேதமாகி மரத்துப்போகும் பிரச்சனை ஏற்படக்கூடும். 

கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக நரம்புகள் அழுத்தப்பட்டு கைகள் மரத்துப்போகும் வாய்ப்புள்ளது. சிலருக்கு கார்டியன் சின்றோம் என்ற நோயால் கைகள் மரத்துப்போகும். குளிர்காலங்களில் குறைவான வெப்பநிலை கைகளில் ரத்த ஓட்டத்தைக் குறைத்து மரத்துப்போகும் பிரச்சனையை உண்டாக்கும். 

இதையும் படியுங்கள்:
நீங்கள் தீவிர செல்போன் உபயோகிப்பாளரா? ‘Phantom ringing syndrome’ என்றால் என்னவென்று தெரியுமா?
hands

ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 

கைகள் மரத்துப்போவது சாதாரணமான ஒரு பிரச்சினையாக இருந்தாலும் இதை கவனக்குறைவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில், இதன் பின்னால் இருக்கும் காரணத்தைப் பொறுத்து பல தீவிர பிரச்சனைகளுக்கு இது வழிவகுக்கலாம். நீண்ட காலமாக கைகள் மரத்து போவதால் நரம்புகள் நிரந்தரமாக சேதமடைய வாய்ப்புள்ளது. 

கைகளில் உள்ள நரம்புகள் சேதமடைவதால், கைகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, தினசரி செயல்கள் செய்வதில் சிரமம் ஏற்படும். சில நேரங்களில் கைகள் மரத்து போவது தீவிரமான நோய்களின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். எனவே, கைகள் மரத்துப் போவதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய ஒரு நரம்பியல் நிபுணரை அணுக வேண்டும். 

இத்துடன் ஆரோக்கியமான உணவு, தொடர்ச்சியான உடற்பயிற்சி, போதுமான தூக்கம் போன்றவை கைகள் மரத்துப்போவதைக் குறைக்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com