kids eat too many biscuits
Do your kids eat too many biscuits?

உங்க குழந்தைகள் பிஸ்கட் அதிகமாக சாப்பிடுகிறார்களா? அச்சச்சோ! 

குழந்தைகளுக்கு பிடித்தமான உணவுப் பொருட்களில் ஒன்று பிஸ்கட். இனிப்பான சுவையில் பல்வேறு வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் காட்டப்படும் பிஸ்கட்கள் குழந்தைகளைக் கவர்வது இயல்புதான். ஆனால் இந்த பிஸ்கட்டுகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா? எந்த அளவு கொடுக்கலாம்? என்பது பற்றி பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். இந்தப் பதிவில் அதுசார்ந்த முழு விவரங்களைப் பார்க்கலாம். 

பிஸ்கட்டில் என்னென்ன இருக்கிறது: 

  • குழந்தைகளுக்கு பிஸ்கட்டை சாப்பிடக் கொடுப்பதற்கு முன் முதலில் அதில் என்னென்ன இருக்கிறது என்பதை பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 

  • பிஸ்கட்டுகளில் அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதிகப்படியான சர்க்கரை உடல் எடை அதிகரிப்பு, பல் சொத்தை, நீரிழிவு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். 

  • சில பிஸ்கட்டுகளில் ட்ரான்ஸ் கொழுப்பு மற்றும் ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்புகள் உள்ளன. இவை உடற்பருமன், இதய நோய்கள் போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாகும். 

  • சில பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்து, பாதிப்புகளை ஏற்படுத்தலாம். 

  • குழந்தைகளைக் கவர பிஸ்கட்டுகளில் செயற்கை சுவைகள் மற்றும் நிறங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை ஒவ்வாமை பிரச்சினைகளை ஏற்படுத்தும். 

  • பிஸ்கட்டுகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைவாகவே இருக்கும், குறிப்பாக நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 

பிஸ்கட்டுகள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் தீமைகள்: 

  • பிஸ்கட்டுகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை என்பதால் அது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தலாம். 

  • பிஸ்கட்டுகள் சாப்பிட்ட பிறகு குழந்தைகளுக்கு வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். இதனால் அவர்கள் சரியான உணவை சாப்பிட முடியாமல் போகலாம். 

  • பிஸ்கட்டுகளில் உள்ள கொழுப்பு மற்றும் நார்ச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனை ஏற்படும். 

  • பிஸ்கட்டுகளில் உள்ள அதிக சர்க்கரை அவர்களுக்கு பல் சொத்தைக்கு வழி வகுக்கும். 

  • பிஸ்கட்டுகளில் உள்ள அதிக கலோரி, அவர்களின் உடல் எடையை கணிசமாக உயர்த்தலாம். 

இதையும் படியுங்கள்:
நீங்க பிஸ்கட் அதிகம் சாப்பிடுவீங்களா? அச்சச்சோ! ஜாக்கிரதை! 
kids eat too many biscuits

பிஸ்கட்டுகளுக்கு பதிலாக என்ன கொடுக்கலாம்? 

குழந்தைகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை தாராளமாகக் கொடுக்கலாம். இதில் இயற்கை இனிப்பு, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், அவர்களது ஆரோக்கியத்திற்கு பெரிதளவில் உதவும். 

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சிற்றுண்டிகளான இட்லி, தோசை உப்புமா போன்ற உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை. 

நட்ஸ் மற்றும் விதைகளில் ஆரோக்கிய கொழுப்புகள், புரதங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், குழந்தைகளுக்குத் தேவையான ஆற்றல்கள் அத்தனையும் கிடைத்துவிடும். 

இவ்வாறு குழந்தைகளுக்கு பிஸ்கட்டை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பதன் மூலமாக, அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். மேலும் சிறுவயதில் ஏற்படும் நோய்த்தொற்றுகளில் இருந்தும் குழந்தைகளை நாம் பாதுகாக்கலாம். ஒருவேளை உங்களது குழந்தைகள் தினசரி அதிகப்படியாக பிஸ்கட் சாப்பிடுகிறார்கள் என்றால் அதை உடனடியாக நிறுத்தி, மாற்று உணவுகளுக்கு பழக்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். 

logo
Kalki Online
kalkionline.com