செப்பு வளையல் அணிவதால் மூட்டு வலி வராதா?

Does wearing copper bangles not cause joint pain?
Does wearing copper bangles not cause joint pain?https://www.rudraksha-ratna.com
Published on

செப்புப் பாத்திரங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வளமான வரலாற்றைக் கொண்டுள்ளன. அவற்றின் அழகியல் மற்றும் ஆரோக்கிய நலன்களுக்காக பல்வேறு கலாசாரங்களில் இன்றளவும் அவை பயன்படுத்தப்படுகின்றன. முதன் முதலில் செப்புப் பாத்திரங்களின் பயன்பாடு மெசபடோமியா மற்றும் எகிப்து உள்ளிட்ட பண்டைய நாகரிகங்களில் இருந்து அறியப்பட துவங்கியுள்ளது. அங்குள்ள மக்கள் கருவிகள், ஆயுதங்கள் மற்றும் பாத்திரங்களுக்காக இதனைப் பயன்படுத்தியுள்ளனர்.

வரலாறு மற்றும் பயன்பாடு: இந்தியாவில் தாமிரத்தின் (செப்பு) வரலாறு பழங்காலத்திலிருந்தே தொடங்கியுள்ளது. கி.மு. 3ம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே செப்பு பயன்பாடு பரவலாக இருந்துள்ளது என வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

இந்தியாவில் தாமிர பாத்திரங்கள் மற்றும் உபகரணங்கள் ஆயுர்வேதம் போன்ற  மருத்துவ நடைமுறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இவை அறுவை சிகிச்சை உபகரணங்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்டன. கூடுதலாக, இந்திய கலாசாரம் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களில் தாமிரம் முக்கியப் பங்கு வகித்துள்ளது.

செப்புப் பாத்திரங்கள் தரும் பலன்கள்:

* செப்புப் பாத்திரங்களின் மூலமாக தண்ணீர் குடிப்பது, நம்முடைய உடலில் செரிமானத்தை மேம்படுத்துதல், மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மையைத் தடுப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகின்றன.

* அதோடு, இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் செப்புப் பாத்திரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

செப்புப் பாத்திரங்கள்
செப்புப் பாத்திரங்கள்https://www.indiamart.com

* பொதுவாகவே, செப்புப் பாத்திரத்தில் சேமிக்கப்படும் தண்ணீரானது காரத்தன்மை கொண்டதாக இருக்கும். எனவே, இதனை குடிப்பதால் உடல் குளிர்ச்சியடையும்.

* பலர் செப்பு நகைகளை அணிகிறார்கள். உதாரணமாக, பலர் செப்பு வளையல்களை அணிவதைப் பார்க்கிறோம். செப்பு வளையல்கள் அணிவது  மூட்டுவலிக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது.

* அறையின் வெப்பநிலையில் 16 மணி நேரம் வரை அசுத்தமான நீரை செப்புப் பாத்திரத்தில் சேமித்து வைப்பது, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் இருப்பைக் கணிசமாகக் குறைக்கிறது. மேலும், இது தண்ணீரில் உள்ள நுண்ணுயிர் சுத்திகரிப்புக்கான தீர்வாகக் கூறப்படுகிறது.

* தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் ஃப்ரீரேடிக்கல்களைக் கொல்லும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாக செப்புப் பாத்திரங்கள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டவர்களுக்கு எளிதான தேர்வாக அமைகிறது.

இதையும் படியுங்கள்:
நினைவாற்றலை மிளிரவைக்கும் 7 கட்டளைகள்!
Does wearing copper bangles not cause joint pain?

செப்புப் பாத்திரங்களின் தற்போதைய நிலை: இந்தியாவில் செப்புப் பாத்திரங்கள் அவற்றின் பாரம்பரியம் மற்றும் ஆரோக்கிய நலன்களுக்காக இன்றளவும் மதிப்பிடப்படுகின்றன. பொதுவாகவே, செப்புப் பாத்திரங்கள் நீர் சேமிப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது. மண் மற்றும் துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்களை விடவும்  இது பயனுள்ளதாக இருக்கும். தற்போது ஏராளமான நவீன நீர் சுத்திகரிப்பு முறைகள் நடைமுறையில் இருந்தாலும்கூட, இயற்கையான முறையில் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் காரணமாக செப்புப் பாத்திரங்கள் இன்னும் ஒருசில இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

இதனுடைய பயன்பாடு, நம்முடைய நாட்டின் கலாசார நடைமுறைகள் மற்றும் சுகாதார நம்பிக்கைகளுடன் ஒத்துப்போகிறது. அதோடு. கூடுதலாக இது நம்முடைய உடலுக்கு அவசியத் தேவையான கனிமமாகும். இந்திய வீடுகளில் நீர் சேமிப்பு மற்றும் நுகர்வுக்கான முழுமையான அணுகுமுறையாக செப்புப் பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com