சாப்பிட்டது நெஞ்சிலேயே நிற்கிறதா? நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு இதை ட்ரை பண்ணுங்க!

Heartburn and Acidity
Heartburn and Acidity
Published on

இன்றய காலக்கட்டத்தில் நம் வாழ்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்களின் மாறுபாடு காரணமாக பல விதமான நோய்கள் ஏற்படுகின்றன. அந்தவகையில் நம்மில் பலருக்கும் இந்த நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் பிரச்சனை இருக்கும். ஒரு சிலருக்கு இந்த பிரச்சனை நீண்ட நாட்களாக இருக்கும். எது சாப்பிட்டாலும் அது தொண்டைக்கும், நெஞ்சுக்கும் இடையிலே நிற்பது போன்ற உணர்வு தோன்றும். மீண்டும் நமக்கு சாப்பிட தோன்றாது. வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். வயிறு உப்புசமாக இருக்கும். 

இந்த நெஞ்செரிச்சல் ஏன் ஏற்படுகிறது? நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் இயற்கையான உணவை வைத்து எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை நாம் இந்த பதிவில் காண்போம்.

நெஞ்செரிச்சல்:

நாம் சாப்பிடும் உணவு வாயில் உமிழ்நீருடன் சேர்ந்து செரிமாணத்தை தொடங்குகிறது. இவ்வாறு உணவானது உணவுக்குழாய் வழியாக இரைப்பையை சென்றடைகிறது. உணவுக்குழாய் இரைப்பையை சந்திக்கும் இடத்தில்  ஒரு வால்வு போன்ற சுருக்கு தசை இருக்கும். அதன் பெயர் தான்  lower esophageal sphincter (LES). இந்த சுருக்கு தசையானது, இரைப்பைக்கு சென்ற உணவை மீண்டும் உணவுக்குழாய்க்கு செல்ல அனுமதிக்காது.

மேலும் உணவு இரைப்பையை அடைந்தவுடன், உணவின் மீது ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரந்து செரிமாணத்திற்கு தயாராகிவிடும். ஆனால் இந்த சுருக்கு தசையில் பிரச்சனை ஏற்படும் போது இந்த அமிலம் கலந்து உணவு உணவுக்குழாய்க்கு வரும்போது நெஞ்சரிச்சல், புளித்த ஏப்பம், எதுக்களிப்பு போன்றவை ஏற்படும். 

இது ஒன்று அல்லது இரண்டு நாள் ஏற்பட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் தொடர்ச்சியாக ஏற்பட்டால், அதற்கு gastroesophageal reflux disease (GERD) தமிழில் 'இரைப்பை அமிலப் பின்னோட்ட நோய்' என்று பெயர். 

எதனால் ஏற்படுகிறது?

எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிக காரமான உணவு, அதிக இனிப்பான உணவு, உடல் பருமன், அடிக்கடி டீ, காபி குடிப்பது, நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது, ஒரே நேரத்தில் அதிகமான உணவு சாப்பிடுவது, வேகமாக சாப்பிடுவது, துரித உணவு சாப்பிடுவது, தூக்கமின்மை, மன அழுத்தம், நொறுக்கு தீனி உண்பது போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள்:
செரிமான பிரச்னைக்கு சிறந்த மருந்தாகும் ஜாதிக்காய்!
Heartburn and Acidity

தடுப்பது எப்படி?

ஒரு டம்ளர் புளிக்காத மோரில் சிறிதளவு பெருங்காய தூள், கொத்தமல்லி சேர்த்து குடிக்கலாம். இதனால் அமிலத்தால் ஏற்பட்ட அல்சர் புண் குணமாகும்.

ஒரு டம்ளர் நீரில் சீரகத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து சூடு ஆறியதும் குடிக்கலாம்.

மேலும் காலை வெறும் வயிற்றில் புளிக்காத மோர், பெருங்காய தூள், இஞ்சி சேர்த்து பருகி வர புளித்த ஏப்பம் வராமல் தடுக்கலாம்.

காஃபீன் நெஞ்சரிச்சலை தூண்டும் என்பதால் காபி குடிப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

நெஞ்சரிச்சல் நீங்க அதிமதுரம் 1ஸ்பூன், சீரக தூள் ½ ஸ்பூன், மஞ்சள் தூள் ½ ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்து சூடு ஆறியதும் குடித்து வந்தால் நெஞ்சரிச்சல் நீங்கும்.

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோயை அதிகரிக்கும் 5 உலர் பழங்கள்!
Heartburn and Acidity

மேலும் சில தகவல்கள்:

சாப்பிட்டவுடன் படுக்க கூடாது. மேலும் அமிலம்  உள்ள உணவான எலுமிச்சை பழத்தை நேரடியாக உட்கொள்ள கூடாது. நூடுல்ஸ் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் நெஞ்சரிச்சலுக்கு காரணம். மேலும் நீண்ட நாட்களாக இந்த பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com