முள்ளங்கியை இந்த 5 உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவுதான்! 

Radish
Radish
Published on

குளிர்காலத்தில் உடலுக்கு நன்மை பயக்கும் முள்ளங்கி, தவறான உணவுகளுடன் சேர்க்கும்போது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? முள்ளங்கியில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏ, பி, சி போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமானத்தை சீராக வைத்து, வாயு பிரச்சனையை போக்கும். ஆனால், முள்ளங்கியை சில குறிப்பிட்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட 5 உணவுகள் மற்றும் அவற்றை சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகக் காணலாம்.

1. முள்ளங்கி + பால்: தோல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்:

முள்ளங்கி அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட எதையும் சாப்பிடுவதற்கு முன்னோ பின்னோ பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். சில சமயங்களில் இந்த பிரச்சனைகள் நீண்ட காலத்திற்கு நீடித்து, குணமடைய நேரமாகும்.

2. முள்ளங்கி + ஆரஞ்சு: வயிற்று பிரச்சனைகளை உண்டாக்கும்:

முள்ளங்கியுடன் ஆரஞ்சை சேர்த்து சாப்பிடுவதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இரண்டுமே தனித்தனியாக ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், சேர்ந்து சாப்பிடும் போது செரிமானத்தை பாதித்து வயிற்று வலி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

3. முள்ளங்கி + சீஸ்: தோல் நோய்களுக்கு வழிவகுக்கும்:

முள்ளங்கி மற்றும் சீஸ் சேர்த்து சாப்பிட சுவை மிகவும் நன்றாக இருக்கும். ஆனால், முள்ளங்கியை சாப்பிட்ட பிறகு சீஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் தோல் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

4. முள்ளங்கி + பாகற்காய்: சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்:

குளிர்காலத்தில் பாகற்காய்  சாப்பிடுவது ஆரோக்கியமானது என்றாலும், முள்ளங்கியுடன் பாகற்காயை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம். குறிப்பாக இரவில் இந்த பிரச்சனை அதிகமாக உணரப்படும்.

இதையும் படியுங்கள்:
காட்டு முள்ளங்கி லேகியம் மற்றும் முசுமுசுக்கை டீ அருந்தலாம் வாங்க!
Radish

5. முள்ளங்கி + தேநீர்: மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மையை உண்டாக்கும்:

முள்ளங்கியுடன் தேநீர் கலவையை சேர்ந்து சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது. இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை போன்ற செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும். முள்ளங்கி குளிர்ச்சித் தன்மை கொண்டதாகவும், தேநீர் சூடான தன்மை கொண்டதாகவும் இருப்பதால், இரண்டும் ஒன்றோடொன்று சேர்ந்து செரிமானத்தை பாதிக்கும்.

முள்ளங்கி மிகவும் ஆரோக்கியமான உணவு என்றாலும், அதை சரியான முறையில் சாப்பிடுவது மிகவும் முக்கியம். மேலே குறிப்பிடப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, முள்ளங்கியை தனியாக அல்லது வேறு சில ஆரோக்கியமான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் அதன் நன்மைகளை முழுமையாகப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com