கோடைகாலத்தில் இந்த 5 உணவுகளை சாப்பிட்டால் அவ்வளவுதான்... ஜாக்கிரதை!

 Don't eat these 5 foods in summer.
Don't eat these 5 foods in summer.
Published on

நமது உடல் செயல்பாடுகளில் தட்பவெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஏற்ப எத்தகைய உணவை சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பருவ காலத்திற்கும் நாம் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள் என்று சிலது உள்ளது. எனவே இப்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், கோடைகாலத்தில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

  1. அதிகப்படியான டீ மற்றும் காபி: கோடைகாலத்தில் நம் உடலில் அதிகமாக நீரிழிப்பு ஏற்படும் என்பதால், அவ்வப்போது தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். அதிகப்படியான காப்பி மற்றும் டீ போன்றவை நீரிழிப்புக்கு வழிவகுக்கும். மேலும் இது உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும் என்பதால், கோடைகாலத்தில் பல எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

  2. அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரை உள்ள உணவுகள்:  பொதுவாகவே அதிக உப்பு கொண்ட உணவுகளை நாம் சாப்பிடக்கூடாது. இது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழி வகுத்து, வீக்கம், இதய நோய்கள் உட்பட பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதேபோல அதிகப்படியான சர்க்கரை கொண்ட உணவுகளையும் நாம் சாப்பிடக்கூடாது. இத்தகைய உணவுகளால் உடலில் நீரிழிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இதில் ஆரோக்கியமற்ற கலோரிகள் நிரம்பியுள்ளதால் நீரிழிவு மற்றும் உடற்பருமன் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். 

  3. கார்பனேட்டட் பானங்கள்: வெயில் காலத்தில் பெரும்பாலானவர்கள் வெப்பத்தைத் தணிக்க குளிர்பானங்களைக் குடிப்பதுண்டு. இவை உங்களுக்கு புத்துணர்ச்சியை அளித்தாலும், உடலுக்கு ஆரோக்கியமற்றது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதிலும் அதிகப்படியான சர்க்கரை இருப்பதால், உடற்பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நீண்ட கால உடல் நலப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்துவிடும். 

  4. அதிக புரோட்டின் நிறைந்த உணவுகள்: அதிக புரதத்தை நாம் எடுத்துக் கொள்ளும்போது, இதில் இயற்கையாக நிகழும் வளர்ச்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கு தண்ணீர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே அதிகப்படியான நீரிழப்புக்கு புரோட்டின் காரணமாகிவிடும். எனவே கோடைகாலத்தில் அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. இல்லையேல் டீஹைட்ரேஷன் பாதிப்புகள் ஏற்படலாம்.

  5. மது: பொதுவாகவே மது உடலில் நீரிழிப்பை ஏற்படுத்தும் ஒன்றாகும். அதுவும் கோடை காலத்தில் மது அருந்துவதால், வாய் வரட்சி, தலைவலி மற்றும் டீஹைட்ரேஷன் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதனால் உடல் வெப்பமாகி அதிக வியர்வையை வெளியேற்றி, நீரிழிப்பு செயல்முறையை துரிதப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
இந்த 5 உண்மைகளைத் தெரிந்து கொண்டால் நீங்களும் வெற்றியாளரே! 
 Don't eat these 5 foods in summer.

மேலும் கோடைகாலத்தில் டார்ச் சாக்லேட், ஊறுகாய் போன்ற உணவுகளையும் அதிகம் சாப்பிடுவதை நிறுத்துங்கள். இத்தகைய உணவுகள் உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்தை விரைவாகக் குறைத்துவிடும் என்பதால், கோடைகாலத்தில் பல்வேறு விதமான பாதிப்புகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். எனவே ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற சரியான உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிடுவதால், என்றும் ஆரோக்கியத்துடன் நீங்கள் இருக்க முடியும்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com