இந்த வண்டியை சாதாரணமா நினைக்காதீங்க! இது ஒரு நடமாடும் மருத்துவமனை!

Ambulance
Ambulance
Published on

சாலையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். திடீரென்று பின்னாலிருந்து ஆம்புலன்ஸ் வாகன எச்சரிக்கை ஒலி கேட்கிறது. உடனே சாலையில் ஓரமாக ஒதுங்கி நின்று அந்த வாகனம் செல்ல வழி கொடுக்கிறோம். நம்மைப் போலவே பிற அனைத்து ரக வாகனங்களும் இவ்வாறே ஒதுங்கி வழிவிட, ஆம்புலன்ஸ் தன் தலையாயப் பொறுப்பை நிறைவேற்ற விரைகிறது. 

பொதுவாக, அடிபட்டவரையோ, நோயாளியையோ சாலை அல்லது வீட்டிலிருந்து மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லும் ஒரு வாகனம் தான் ஆம்புலன்ஸ் என்று இதன் சேவையைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். அதன் உள்ளே அமைந்திருக்கும் மருத்துவ சாதனங்களை வைத்துப் பார்த்தால், அது ஒரு நடமாடும் மருத்துவமனையோ என்றும் வியக்க வைக்கும்.

Ambulance
Ambulance
  • எடுத்துக்காட்டாக சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றால், அதற்கு பேசிக் லைஃப்  சப்போர்ட் (Basic Life Support) வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

  • நோயாளியில் அப்போதைய உடநலத்தைக் கண்காணிக்க ஆக்ஸிஜன் ஸிலிண்டர், ரத்த அழுத்த  மானிட்டர், ஸ்டதாஸ்கோப் போன்ற முதலுதவி உபகரணங்கள் இந்த வாகனத்துக்குள் இருக்கும். விபத்தில் சிக்கியவர் மருத்துவமனைக்குச் செல்லும்வரை அவருடைய உபாதைகளைக் கட்டுப்படுத்த அல்லது குறைக்க இந்த சாதனங்கள் உதவுகின்றன. 

  • இருதயத் துடிப்பு தாறுமாறாகி, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு நோயாளியை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வருவது, அட்வான்ஸ் லைஃப் சப்போர்ட் ஆம்புலன்ஸ் (Advance Life Support Ambulance).  இந்த வாகனத்தில் நோயாளியின் இதயத் துடிப்பு நின்று போனால் அந்தத் துடிப்பை மீண்டும் கொண்டு வரவைப்பதற்காக, டிபைபுலேட்டரல் கருவி, இ.ஸி.ஜி. கருவி, செயற்கையாக ஆக்ஸிஜன் கொடுக்க வென்டிலேட்டர், ஆக்ஸிஜன் ஸிலிண்டர், கை அழுத்தத்தால் ஆக்ஸிஜன் கொடுக்க ரெஸெஷன் கிட் (Recession Kit) போன்றவை இருக்கும். இந்த வகை ஆம்புலன்ஸ், இருதயத் துடிப்பு நின்று போன அல்லது அல்லது வேறுவகை கடுமையான பாதிப்பு கொண்ட இருதய நோயாளியை அழைத்துச் செல்லப் பயன்படுகிறது. இந்தக் கருவிகளை முறையாகவும், ஆக்கபூர்வமாகவும் கையாள நன்கு பயிற்சி பெற்ற எமர்ஜென்ஸி மெடிகல் டெக்னீஷியன், (Emergency Medical Technician) அதாவது அவசரகால மருத்துவ நிபுணர்கள் எப்போதுமே இந்த ஆம்புலன்ஸில் இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
உடல் எடை குறைப்பிற்கு மருந்துகள் பயன்படுத்துவது சரியா? உண்மை என்ன? 
Ambulance
  • இவை தவிர, ஆம்புலன்ஸ் கூரையில் அமைக்கப்பட்டிருக்கும் சிகப்பு மற்றும்  ஊதா வண்ண விளக்குகளும் எச்சரிக்கை உத்திகளே. பகல் நேரத்தில் சிகப்பு வண்ண சுழல் விளக்கு வெகு தொலைவிலிருந்தே ஆம்புலன்ஸ் வருவதை அடையாளம் காட்டும்.  அதேபோல இரவு நேரத்தில்  ஊதா வண்ண விளக்கு அடையாளம் காட்டும். இரண்டு விளக்குகளும் மாறி, மாறி ஒளிர்ந்து ஆம்புலன்ஸ் முன்னேறிச் செல்ல உதவும். 

  • சைரன் ஒலியை கவனக் குறைவால் முன்னால் போகிற  வாகன ஓட்டி அறியவில்லை என்றால், அவர் வாகனத்திலுள்ள, பின் நோக்குக் கண்ணாடியில் பார்த்தாரானால் தெரிந்து கொள்வார். ஆமாம், அந்த பிம்பத்தில் ஆம்புலன்ஸ் என்ற எழுத்துகள் பளிச்சென்று தெரியும். அப்படி கண்ணாடி பிம்பம் தெளிவாகப் படிக்கும் வகையில் அந்த சொல், ஆம்புலன்ஸ் வாகனத்தில் வலம்-இடமாக எழுதப்பட்டிருக்கும். 

ஆம்புலன்ஸ் வாகனம் ஆற்றிவரும் அரும்பணிகளைப் பற்றி முழுமையாகத் தெரியாததாலேயே சிலர் வெகு அலட்சியமாகவும், தன் வேலையே பிரதானம் என்ற சுயநலத்தாலும் அதற்கு வழி விடாமல் பிரச்னை தருகிறார்கள். அந்த வாகனத்தில் தன் குடும்பத்தார் செல்வதாக அவர்கள் நினைத்துக் கொண்டால் போதும், உடனே, அப்படியே ஒதுங்கி வழி விட்டுவிடுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com