உடல் எடை குறைப்பிற்கு மருந்துகள் பயன்படுத்துவது சரியா? உண்மை என்ன? 

Is it OK to use drugs for weight loss?
Is it OK to use drugs for weight loss?
Published on

இன்றைய காலத்தில் உடல் எடை குறைப்பு என்பது பலருக்கு ஒரு முக்கியமான விஷயமாக மாறிவிட்டது. அதிக எடை மற்றும் உடற்பருமன் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், தங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்க பலர் விரும்புகின்றனர். உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு போன்ற பாரம்பரிய முறைகளுடன், உடல் எடையைக் குறைக்க உதவும் பல மருந்துகள் இன்று கிடைக்கின்றன. இந்தப் பதிவில் அத்தகைய மருந்துகள் பற்றிய முழு விபரங்களைத் தெரிந்து கொள்வோம். 

உடல் எடையை குறைக்க உதவும் மருந்துகள் பல்வேறு வழிகளில் செயல்படுகின்றன. சில மருந்துகள் பசியைக் குறைக்கும், மற்றவை உடலில் உள்ள கொழுப்பை எரிக்கும், சில மருந்துகள், நமது உடல் உணவுகளை உறிஞ்சும் செயல்முறையை தடுக்கின்றன. 

பசியை குறைக்கும் மருந்துகள் மூளைக்கு சில சிக்னல்களை அனுப்பி ஒருவர் அதிகம் சாப்பிடுவதற்கு முன்பே வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்துகின்றன. இதனால், ஒருவர் குறைவாகவே சாப்பிட்டு உடல் எடையைக் குறைக்கலாம். கொழுப்பை எரிக்கும் மருந்துகள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, அதிக கலோரியை எரிப்பதால், உடல் எடை குறைகிறது. உணவு உறிஞ்சுதலைத் தடுக்கும் மருந்துகள், கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சில ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதை முற்றிலுமாகத் தடுக்கின்றன.  

நன்மை, தீமைகள்: 

உடல் எடையைக் குறைக்க கஷ்டப்படுபவர்களுக்கு இத்தகைய மருந்துகள் விரைவான எடை இழப்பை ஏற்படுத்தக்கூடும். பசியை குறைக்கும் மருந்துகள் உணவு கட்டுப்பாட்டை மேலும் எளிதாக்கும். சில மருந்துகள் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது போன்ற கூடுதல் ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியவை. 

விரைவாக உடல் எடையைக் குறைப்பதால் இந்த மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். வயிற்றுப்போக்கு, குமட்டல், மலச்சிக்கல், தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்றவை இத்தகைய மருந்துகளின் பக்க விளைவுகள். இந்த மருந்துகளையே முழுமையாக நம்பி உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்ற விஷயங்களை கடைப்பிடிக்காமல் இருந்தால், இதனால் ஏற்படும் எடை இழப்பு தற்காலிகமானதாகவே இருக்கும். மேலும், சில மருந்துகள் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 

இதையும் படியுங்கள்:
தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வந்தால் என்ன ஆகும் தெரியுமா? 
Is it OK to use drugs for weight loss?

யாரெல்லாம் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்? 

உங்களது BMI 30-க்கு அதிகமாக இருந்தால் இந்த மருந்துகளை எடுக்க மருத்துவரிடம் ஆலோசிக்கலாம். அல்லது உங்களுக்கு ஏற்கனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் அல்லது அதிக கொழுப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால், இத்தகைய மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அல்லது எவ்வளவுதான் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்தாலும் உங்களால் எடையை இழக்க முடியவில்லை என்றால், இந்த மருந்துகளை முயற்சித்துப் பார்க்கலாம். 

இந்த மருந்துகளின் பக்க விளைவுகளை கருத்தில் கொண்டு, முடிந்தவரை இவற்றை பயன்படுத்தாமல் உடல் எடையை குறைக்க முயற்சிப்பது நல்லது. கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள், 18 வயதிற்கு உட்பட்டவர்கள், ஏற்கனவே சில மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்பவர்கள், இது போன்ற உடல் எடை குறைப்பு மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. 

உடல் எடை குறைப்பு மருந்துகள் அனைவருக்கும் ஏற்றது அல்ல. எனவே, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இவற்றை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக்கூடாது. பிறர் சொல்வதைக் கேட்டு உங்களுடைய சுய விருப்பத்தின் பேரில் இவற்றை முயற்சிக்க வேண்டாம். இது உங்களுக்கே ஆபத்தாக முடியலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com