இந்த எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்தினால் அவ்வளவுதான்!

Don't use these oils for cooking!
Don't use these oils for cooking!
Published on

இன்றைய நவீன உலகில், சமையலில் எண்ணெய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை சுவையை மேம்படுத்துவதோடு, உணவுக்குத் தேவையான நிறத்தைக் கொடுப்பதற்கு அவசியமானதாக இருக்கிறது. இருப்பினும் எல்லா எண்ணெய்களும் நமக்கு ஆரோக்கியமானவை அல்ல. சிலவகை எண்ணெய்கள் சமையலுக்கு பயன்படுத்தத் தகுதியற்றவை. இந்தப் பதிவில் சமையலுக்கு பயன்படுத்தக்கூடாத சில எண்ணெய்கள் பற்றியும், அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றியும் பார்க்கலாம்.

சமையலுக்கு தகுதியற்ற எண்ணெய்கள்:

பயன்படுத்தப்பட்ட எண்ணெய்கள்: பயன்படுத்தப்பட்ட எண்ணெய்கள் என்பது ஏற்கனவே சமைக்க பயன்படுத்தப்பட்ட, அதிக வெப்பமடைந்த எண்ணெய் ஆகும். இதில் கெட்டுப்போன கொழுப்புகள், உணவின் மிச்சங்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள் நிறைந்திருக்கும். மீண்டும், மீண்டும் அவற்றை சூடாக்கி பயன்படுத்தும் போது இவை மேலும் சிதைந்து, ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்கி, நமது செல் சேதத்திற்கு வழிவகுக்கும்.

ரீஃபைண்ட் எண்ணெய்கள்: ரீஃபைண்ட் எண்ணைகள் அதிக வெப்பநிலையில் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலமாக அவற்றின் இயற்கை நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அழிக்கப்படுகின்றன. மேலும், இந்த செயல்முறையில் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகமாக உருவாகி, இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும். எனவே, ரீஃபைண்டு எண்ணெய்களை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்த எண்ணெய்கள்: நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்த தேங்காய் எண்ணெய் மற்றும் வெண்ணெய் போன்றவை திடமாக இருக்கும். அவை குறைந்த வெப்பநிலையிலேயே உறைந்துவிடும் தன்மை கொண்டவை. அதிக அளவு நிறைவுற்ற கொழுப்புகளை உட்கொள்வது இதய நோய் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

இத்தகை எண்ணெய்களை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள்:

அதிகம் பயன்படுத்தப்பட்ட அல்லது ரீஃபைடு செய்யப்பட்ட எண்ணெய்களில் உள்ள சேர்மங்கள் புற்றுநோய் செல்கள் உருவாவதை ஊக்குவிக்கலாம். மேலும், இதில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்புகள், உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

இதுபோன்ற எண்ணெய்களில் அதிக கலோரிகள் உள்ளன. இவற்றை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்புக்கு வழி வகுத்து, பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். பயன்படுத்தப்பட்ட எண்ணெய்கள் செரிமான பிரச்சனை, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. எனவே, ஆரோக்கியமான எண்ணெய்களை உங்கள் உணவுக்காக பயன்படுத்துங்கள்.

இதையும் படியுங்கள்:
Aroma Oils: சரும அழகை மேம்படுத்தும் அரோமா எண்ணெய்கள்! 
Don't use these oils for cooking!

ஆரோக்கியமான எண்ணெய்கள்:

ஆலிவ் எண்ணெய் ஒரு ஆரோக்கியமான எண்ணையாகும். இதில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது இதய நோய், புற்றுநோய் மற்றும் அல்சைமர் நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடுகு எண்ணெய் மற்றொரு ஆரோக்கியமான சமையல் எண்ணெயாகும். இதிலும் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி வீக்கத்தை குறைத்து புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும். கடுகு எண்ணெய் அதன் தனித்துவமான சுவை மற்றும் அதிக ஸ்மோக்கிங் பாயிண்ட் காரணமாக பிரபலமானது.

நல்லெண்ணெய் என்பது ஒரு பாரம்பரிய இந்திய சமையல் எண்ணெயாகும். இதில் ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது இதய ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன.

நீங்கள் எந்த வகையான எண்ணெய் பயன்படுத்தினாலும் அவற்றை மிதமாகவே அழ பயன்படுத்தவது அவசியம். எல்லா எண்ணெய்களும் அதிக கலோரி கொண்டவை என்பதால், உங்களது உணவில் அவற்றை அதிகமாக சேர்க்காதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com