இனி காலையில் தினமும் கண் விழித்தால்... வெந்தய டீ குடியுங்கள்!

Fenugreek Tea
Fenugreek Tea
Published on

ஒரு பொருள் உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்துகிறது என்று கூறினால் நம்ப முடிகிறதா? தற்போது அதிகமான மக்கள் இந்த நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு நாம் தினமும் உணவில் பயன்படுத்தும் வெந்தயம் சிறந்த தீர்வாக இருக்கிறது. வெந்தயம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. காலை தினமும் வெறும் வயிற்றில் வெந்தய டீ குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வெந்தய டீ பயன்கள்:

இந்திய உணவுப் பொருட்களில் தவிர்க்க முடியாத பொருளாக வெந்தயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல நாடுகளிலும் வெந்தயத்தை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். வெந்தயம் மட்டுமல்லாமல் வெந்தய இலை உணவுப்பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நீரில் ஒரு ஸ்பூன் வெந்தய பொடி சேர்த்து கொதிக்க வைத்து, காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஹைப்பர் கிளைசீமியாவை குறைக்கிறது. ஹைப்பர் கிளைசீமியா என்பது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறிக்கும் மருத்துவ நிலையாகும்.

மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயம் சிறந்த மருந்தாக உள்ளது. ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடுவதன் மூலம் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வலி குறைகிறது.

வெந்தய தேநீர் குடிப்பதால் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உடலில் சரியாக சுரக்க உதவுகிறது.

செரிமானத்திற்கு சிறந்த தீர்வாக வெந்தயம் உள்ளது. காலை வெறும் வயிற்றில் வெந்தய டீ குடித்து வந்தால் இரைப்பையில் சுரக்கும் அமிலத்தால் ஏற்படும் வயிற்றுப் புண்களை குணப்படுத்துகிறது.

தினந்தோறும் குடிக்கும் தேநீருக்கு பதிலாக இந்த வெந்தய தேநீர் குடித்து வந்தால் உடலில் தேங்கும் கெட்ட கொழுப்பை குறைத்து, உடல் எடை குறைக்க உதவுகிறது.

மேலும் வெந்த தேநீர் குடித்து வருவதால் இரத்தில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்கி, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் முகம் பொலிவாக பளபளப்பாக மாறுகிறது.

இதையும் படியுங்கள்:
நாள்பட்ட நோய்களின் எழுச்சி - காரணங்கள் என்ன? கட்டுப்படுத்துவது எப்படி?
Fenugreek Tea

தொண்டை புண், சளி, இருமல் உள்ளவர்கள் முக்கியமாக ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வெந்தய தேநீர் சிறந்த தீர்வாகும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் வெந்தய தேநீர் குடிக்கலாம். ஏனெனில் நீரில் கரையக் கூடிய நார்ச்சத்து வெந்தயத்தில் உள்ளதால் நீண்ட நாட்களாக உள்ள மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது.

குறிப்பு: கொண்டைக்கடலை மற்றும் வேர்க்கடலை சாப்பிடும் போது ஒவ்வாமை ஏற்படுபவர்களுக்கு வெந்தய தேநீர் ஒவ்வாமையை ஏற்படுத்தும். மேலும் அதிகமாக வெந்தயம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு முழுமையாக குறைந்து பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே அளவாக பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com