
சமீபகாலமாக இளைய தலைமுறையினரிடையே இந்த வியாதி அதிகமாக காணப்படுகிறது. வாழ்க்கைமுறை, சத்தில்லாத உணவு, தூக்கமின்மை மற்றும் அதிகமாக டிஜிட்டல் உபயோகிப்பதால் கண்ணுக்கு சோர்வு போன்றவற்றால் இது ஏற்படுவதாக தெரிகிறது. இந்த மாதிரி வறண்ட கண்களின் நிலை தொடர்ந்தால் பார்வைகுறைபாடு ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏசி அறைகளில் அதிக நேரம் இருப்பது மற்றும் சுற்றுசூழலின் மாசும் காரணமாகிறது.
பெரும்பாலோருக்கு கண்களின் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து முக்கியமானது என்பது தெரிவதில்லை. அதிக பதப்படுத்தப் பட்ட உணவுகளை உட்கொள்வது மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் குறைந்த உணவுகள் அழற்சியை ஏற்படுத்தும். கண் மேம்பாட்டிற்கு, ஆளி விதைகள், அவகேடோ மற்றும் வால்நட் சிறந்தவை. கண்ணில் ஈரத்தன்மை குன்றி விட்டால் இந்த நிலை ஏற்படும். எப்போதும் உடலை நீரேற்றத்துடன் வைக்க வேண்டும்.
நல்ல தூக்கம் இல்லாவிட்டாலும் கண்கள் பாதிக்கப்படும். சிலருக்கு கண்களை முழுமையாக மூடி தூங்க முடியாது. இதை Nocturnal lagophthalmos என்பார்கள்.
தூக்கமின்மையால் கண் வறண்டு விடுவதோடு பார்வை குறைபாடும் ஏற்படும்.
அதிக நேரம் கணினி, செல்ஃபோன் போன்றவற்றை பயன்படுத்துவதாலும் கண்ணில் நீர் குறைந்து வறண்டு விடும். அதிக நேரம் காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கும் இது ஏற்படும்.
இதை எப்படி கட்டுப்படுத்துவது?
ஒமேகா 3, கொழுப்பு அமில உணவுகள் மற்றும் அதிக நீர் அருந்துதல், பதப்பட்ட உணவை குறைத்தல், சர்க்கரை அதிகம் சாப்பிடுவதை தவிர்த்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
20_20 _20 விதியை கடைபிடிக்கவும் அதாவது ஒவ்வொரு 20 நொடிகள் ஸ்க்ரீன் பார்ப்பதை தவிர்க்கவும் 20 அடிகள் தள்ளி 20 நொடிகள் பார்க்கவும்.
தூக்க முறையை ஒழுங்குபடுத்துங்கள்.
ஏசி ரூமில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்கவும் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து உறங்காதீர்கள்.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.)