உலர் பழங்களை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள நமக்கு இதய பாதுகாப்பு, ஆன்டி ஆக்ஸிடேடிவ் பண்புகள், நீரிழிவு நோய் எதிர்ப்புச் சக்தி, அதிகரிக்கும். அதோடு உடல் எடையைக் குறைப்பதற்கும், உடலில் கொழுப்பு சத்தை சீராக வைப்பதற்கும், எலும்பை வலுவாக்குவதற்கும், செரிமானம் சீராக நடைபெறவும் உதவி புரிகிறது.
பொதுவாக, உலர் திராட்சை, பேரீச்சம் பழம், அத்தி, கொடி முந்திரி மற்றும் பாதாமி பழம், Apricot ஆகியவற்றை உலர் பழங்களாக நாம் உண்கிறோம். மேலும், மாம்பழம், பெர்ரி பழங்கள், ஆப்பிள், அன்னாசி போன்ற பழங்களில் இருந்தும் உலர் பழம் தயாரிக்கப்படுகிறது. இதில் நுண்ணோட்டச் சத்துக்கள் அதிகம் இருப்பதால் இதனை சரியான அளவில் உட்கொள்வதன் மூலம் சிறந்த உணவுப் பொருளாக மாறுகிறது. இவை இயற்கையாகவே இனிப்புச் சுவை கொண்டதால் சர்க்கரைக்கு மாற்றாக இவற்றை உபயோகிக்கலாம்.
உலர் திராட்சை இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை உடையது. உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து இரத்த சோகை குணமாக உதவுகிறது. அமிலத்தன்மை சார்ந்த நோய்கள், மலச்சிக்கலை குணமாக்க வல்லது. சரியான அளவில் எடுக்கப்பட்டால் உடல் எடை குறையவும் உதவி புரிகிறது.
உலர் பிளம்ஸில் வைட்டமின் ஏ, நீர்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது எலும்பு மற்றும் தசை வலுப்பெற உதவுகிறது. உடலில் கொழுப்புச் சத்தை சீரமைக்கிறது.
பேரீச்சம் பழத்தில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இது உடலின் இரத்த அளவை அதிகரித்து இரத்த சோகையை குணப்படுத்துகிறது. வயிற்றுப் புண், இதய நோய் உள்ளவர்கள் உட்கொள்ள நல்லது. சுகப்பிரசவம் நடைபெற உதவுகிறது.
உலர் அத்திப்பழம் மிதமான இனிப்பு சுவை கொண்டதால் பெரியவர்களுக்கும் கொடுக்க இரும்புச்சத்து, கால்சியம் அதிகரிக்க உதவுகிறது. மேலும், உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், புற்றுநோயின் வளர்ச்சியை குறைக்கவும் உதவுகிறது.
ஆப்ரிகாட் இதயக் கோளாறுகள், உடலின் சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும் உடல் எடையை சீராக வைப்பதற்கும் உதவுகிறது. உலர் பழங்களில் அனைத்து வகையான சத்துக்களும் உள்ளன. உலர் பழங்களை தினமும் சேர்த்து கொண்டு உடல் ஆரோக்கியத்தை காப்போம். வளரும் பருவத்தினருக்கு இவற்றைக் கொடுத்து வர அவர்களது ஆரோக்கிய வளர்ச்சி மேம்படும்.