பொதுவாக, இஞ்சியில் பல ஆரோக்கிய நன்மைகள் நிரம்பியுள்ளன. புதிய இஞ்சியை விட, உலர்ந்த இஞ்சி சிறந்தது என்கிறது ஆயுர்வேதம். பல்வேறு உடல் சார்ந்த வலிகளை குணப்படுத்த உலர்ந்த இஞ்சித்தூள் நீண்ட காலமாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இஞ்சியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் உலர் இஞ்சி பொடி தயார். இதை வெந்நீருடன் ஒரு ஸ்பூன் கலந்து குடிப்பதால் கீழ்க்கண்ட பிரச்னைகளை தீர்க்கிறது.
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது: இது உடலின் மெட்டபாலிக் ரேட் எனப்படும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. உலர்ந்த இஞ்சியில் உள்ள தெர்மோஜெனிக் எனும் வேதிப்பொருள், இரத்தத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பதப்படுத்தும் குளுக்கோஸ் மற்றும் அதிகப்படியான கெட்ட கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதனால் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவும்.
பித்தம் தணிக்கும்: இது பித்தத்திற்கு கைகண்ட மருந்து. சிலருக்கு காலையில் எழுந்ததும் தலைசுற்றல். குமட்டல் மற்றும் வாந்தி வருவது போன்ற அறிகுறிகள் இருக்கும். உலர்ந்த இஞ்சியை வெந்நீருடன் சேர்த்துக் குடிக்கலாம். கர்ப்பிணிப் பெண்களின் காலை நேர சுகவீனதிற்கும் ஏற்றது.
வயிறு உப்புசத்தைக் குறைக்கும்: வயிறு உப்புசத்திற்கும் இது முழுமையான நிவாரணம் அளிக்கிறது. உண்ணும் உணவை நன்றாக செரிக்க வைத்து, பசியைத் தூண்டுகிறது.
சளி, இருமல், காய்ச்சலை குணமாக்கும்: குளிர்காலத்தில் பெரும்பான்மையானவர்களைத் தாக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு கண்கண்ட மருந்து உலர் இஞ்சிப்பொடி. இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருமல், காய்ச்சல் ஜலதோஷத்திற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் இஞ்சிப்பொடியை சேர்த்து, ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரையும் கலந்து பருகலாம். தொண்டைக்கட்டு, கடுமையான சளி விலகும்.
மாதவிடாய் வலியைப் போக்க உதவுகிறது: மாதவிடாய் சுழற்சியின் முதல் மூன்று நாட்களில் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு கிராம் உலர் இஞ்சி பொடியை உட்கொள்வது மாதவிடாய் வலியை கணிசமாகக் குறைக்க உதவும்.
நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது: இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது/ இதனால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
முக அழகிற்கு: உலர் இஞ்சிப்பொடி பெரும்பாலான ஃபேஸ் பேக்குகளில் சேர்க்கப்படுகிறது. ஏனெனில், அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடைபட்ட துளைகளை அகற்றி முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன. பருக்கள் மற்றும் முகப்பருவை தடுக்கும் மருத்துவ குணங்களும் உலர் இஞ்சியில் உள்ளது.