சளி, காய்ச்சல், இருமலில் இருந்து ஈசியாய் விடுபடலாம்!

Easily get rid of colds, flu, and coughs!
Easily get rid of colds, flu, and coughs!
Published on

ழை காலம், பருவ மாற்றம் தொடங்கும்போது சளி, இருமல், காய்ச்சல் வருவது இயல்பு. அதிலும் மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கும்பொழுது எல்லோருக்குமே இந்த பாதிப்பு ஓரளவுக்கு வந்துவிடும். ஆனால், அவை வைரஸ் தொற்றுகளாக இருப்பின் உடனடி சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியம். அப்படி தொற்றுகள் இல்லை, சாதாரண இருமல், சளிதான் என்றாலும் அவை கட்டாயம் மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் வரையிலும் நீடிக்கும். அந்த நாட்களில் உங்களை எப்படிப் பாதுகாப்பாக பராமரித்துக்கொள்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பயம் தேவையில்லை: சளி, இருமல், காய்ச்சல் என பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றை எதிர்கொள்ளும் பக்குவத்தை தெரிந்துகொள்ளுங்கள். சாதாரண நாட்களைக் காட்டிலும் இந்த சமயத்தில்தான் உங்களுக்கு அதிக ஆற்றல் அவசியம். அப்போதுதான் தொற்றுகளை எதிர்த்துப் போராட முடியும். நிலைமை மோசமாக இருக்கும் சமயத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகத்திலிருந்து விடுமுறை கேட்டு வீட்டில் நன்கு ஓய்வு எடுங்கள்.

ஓய்வில் கவனம்: விடுமுறையில் வீட்டில் இருக்கும்போது தூங்குவதை மட்டுமே வேலையாக வைத்துக்கொள்ளாதீர்கள். அதேபோல், டிவி, செல்ஃபோன், லாப்டாப்புகள் பார்ப்பதைத் தவிருங்கள். வெளியேறும் சளியை அவ்வப்போது வெளியேற்றி விடுங்கள். இரவில் சளி, இருமல் அதிகமாகிறதெனில் தலையணையை உயர்த்திக்கொள்ளுங்கள். இல்லையெனில் தண்ணீர் தலைக்கு ஏறி சைனஸ் பிரச்னை வரும்.

தண்ணீர் குடியுங்கள்: நெஞ்சு சளி, தொடர் சளி இருப்பின் அதை தண்ணீரால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். எனவே, பாட்டில் நிறைய வெந்நீர் வைத்துக்கொண்டு அவ்வப்போது குடித்துக்கொண்டே இருங்கள். உடலில் நீர் வற்றினால் தலைவலி, சோர்வு போன்றவை உண்டாகும். சோடா, கஃபைன், காஃபி, ஆல்கஹால் ஆகியவற்றை தவிருங்கள். அவை உடல் நீரை விரைவில் வறட்சியாக்கும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் பிரபலமாகி வரும் ‘Grey Divorce’: என்ன காரணம் தெரியுமா?
Easily get rid of colds, flu, and coughs!

உப்பு தண்ணீர்: வெதுவெதுப்பான கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு கலந்து கொப்பளிப்பது இருமல், தொண்டை கரகரப்பை போக்கும்.

தேன் குடிக்கலாம்: பெரியவர்களாக இருந்தால் ஒரு ஸ்பூன் தேனை இரவு தூங்கும் முன் குடிப்பதால் இருமல் குறையும். மற்ற நேரங்களில் சூடான லெமன் டீயில் தேன் கலந்து குடியுங்கள். ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுக்காதீர்கள்.

வெந்நீரில் குளியுங்கள்: வெந்நீரில் குளிப்பது சோர்வான உடலுக்கு ஆற்றல் தரும். உடல் வலி இருந்தாலும் இதமாக இருக்கும்.

வீட்டுக் குறிப்பு: இஞ்சி டீ, கசாயம், நிலவேம்பு கசாயம் என இயற்கை மருத்துவங்களை வல்லுநர்களின் ஆலோசனைப்படி பின்பற்றுங்கள். அதேபோல், வீட்டில் சிக்கன் சூப் செய்து சுடச் சுட சாப்பிடுவதும் சளி இருமலுக்கு இதமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com