நள்ளிரவில் பசி எடுக்குதா? பிரிட்ஜை திறக்கும் முன் இந்த ஷாக்கிங் உண்மையைத் தெரிஞ்சுக்கோங்க!

Eating at night
Eating at night
Published on

இப்போதெல்லாம் பலருக்கும் இரவில் வெகு நேரம் கழித்து தூங்கும் பழக்கம் வந்துவிட்டது. மொபைலில் படம் பார்ப்பது, சீரிஸ் பார்ப்பது அல்லது இரவு நேர ஷிப்ட் பார்ப்பது என விழித்திருக்கும் போது, சரியாக நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஒரு விசித்திரமான பசி வயிற்றை கிள்ளும். உடனே சமையலறைக்கு சென்று பிரிட்ஜை திறந்து ஏதாவது ஸ்னாக்ஸ் அல்லது இனிப்பு வகைகளை எடுத்து சாப்பிடுவது பலருக்கும் ஒரு வழக்கமான ஒன்றாகி விட்டது. 

ஆனால், இப்படி கண்ட கண்ட நேரத்தில், அதிலும் குறிப்பாக நள்ளிரவில் ஸ்னாக்ஸ் சாப்பிடுவது நமது உடலுக்கு நிஜமாகவே நல்லதா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

குழம்பிப்போகும் உயிரியல் கடிகாரம்!

நமது உடலுக்கு என்று ஒரு பிரத்யேகமான உயிரியல் கடிகாரம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. பகல் நேரம் வேலை செய்வதற்கும், இரவு நேரம் உறுப்புகள் தங்களை புதுப்பித்து ஓய்வெடுப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவில் நாம் தூங்க வேண்டிய நேரத்தில் திடீரென உணவை உள்ளே தள்ளினால், நமது செரிமான மண்டலம் குழப்பம் அடைந்து விடும். ஓய்வெடுக்க வேண்டிய வயிறு, அந்த நள்ளிரவில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறது. இதனால் செரிமான கோளாறுகள் ஏற்படுவது மட்டுமல்லாமல், உடலின் ஒட்டுமொத்த சுழற்சியும் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.

எகிறும் உடல் எடை!

நள்ளிரவில் சாப்பிடும் போது நாம் பெரும்பாலும் சிப்ஸ், சாக்லேட் அல்லது பிஸ்கட் போன்ற அதிக கலோரி உள்ள ஜங்க் உணவுகளை தான் அதிகம் தேடுவோம். பகலில் சாப்பிடும் உணவை செரிக்க நமது உடல் அதிக ஆற்றலை செலவிடும். ஆனால் இரவில் நமது மெட்டபாலிசம் எனப்படும் வளர்ச்சிதை மாற்றம் ரொம்பவே மெதுவாக தான் நடக்கும். அதனால் அந்த நள்ளிரவு ஸ்னாக்ஸில் இருந்து வரும் கலோரிகள் எரிக்கப்படாமல், நேராக கொழுப்பாக மாறி நமது இடுப்பு மற்றும் தொப்பை பகுதிகளில் நிரந்தரமாக தங்கிவிடும். உடல் எடை தாறுமாறாக அதிகரிக்க இதுவே ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

அசிடிட்டி!

இரவில் எதையாவது கொறித்துவிட்டு உடனே சென்று படுக்கையில் சாய்வது நெஞ்செரிச்சலுக்கு ஒரு மிகப்பெரிய அழைப்பிதழ் ஆகும். உணவு செரிமானம் ஆவதற்கு முன்பே தூங்க செல்வதால், வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் மேல்நோக்கி தொண்டைக்கு வந்து ஆசிட் ரிஃப்ளக்ஸ் எனப்படும் கடுமையான எரிச்சலை உருவாக்கும். இதனால் உங்களின் ஆழ்ந்த தூக்கம் கெட்டுப்போய், அடுத்த நாள் காலை முழுவதும் ஒருவிதமான சோர்வு மற்றும் தலைவலியுடனே சுற்ற வேண்டி இருக்கும்.

இதையும் படியுங்கள்:
முத்தான முல்லா கதை: தலையில் விழுந்த பழம்!
Eating at night

எப்போதாவது ஒருநாள் நள்ளிரவில் பசித்தால் ஒரு பழம் அல்லது கொஞ்சம் சூடான பால் குடிப்பது எந்த தப்பும் இல்லை. ஆனால் தினமும் நள்ளிரவில் ஜங்க் உணவுகளை கொறிப்பதை ஒரு வழக்கமாக மாற்றுவது நமது ஆரோக்கியத்திற்கு நாமே வைக்கும் மிகப்பெரிய உலை ஆகும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com