மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ இயற்கை பல உணவுகளை வழங்கியுள்ளது. அவற்றில் கேரட் மற்றும் தேன் மிகவும் முக்கியமானவை. கேரட் வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு காய்கறி. தேன் இனிப்பு சுவை கொண்ட இயற்கையின் வரப்பிரசாதம். இது ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து தினசரி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும்.
கேரட்டின் சத்துக்கள்: கேரட்டில் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற உடலுக்குத் தேவையான அத்தியாவசிய விட்டமின்களும் தாதுக்களும் உள்ளன. இது உடலில் ஏற்படும் எல்லா விதமான பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடியது.
தேனின் சத்துக்கள்: தேனில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செல் சேதத்தைத் தடுக்கிறது. மேலும் இதன் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் தொற்று நோய்களிலிருந்து எதிர்த்து போராட உதவுகிறது. இதில் செரிமானம் மற்றும் தூக்கத்தை மேம்படுத்தும் கலவைகள் இருப்பதால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
கேரட் மற்றும் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கண்பார்வையை மேம்படுத்துகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது.
மலச்சிக்கலைத் தடுக்கிறது.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.
இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
காயங்களை ஆற்றுகிறது.
தூக்கத்தை மேம்படுத்துகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எடை இழப்புக்கு உதவுகிறது.
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
மூட்டு வலியைக் குறைக்கிறது.
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.
கேரட் மற்றும் தேன் சாப்பிட சில வழிகள்:
கேரட்டை பொடியாக துருவி அதில் தேனை கலந்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். அல்லது கேரட் சாற்றுடன் தேனை கலந்து குடிக்கலாம். கேரட்டை துண்டு துண்டாக வெட்டி அதில் தேனை ஊற்றி சாப்பிடுவது பலருக்கு பிடித்த ஒன்று. கேரட் மற்றும் தேன் சேர்த்து ஸ்மூத்தி தயாரித்து குடிக்கலாம். கீரைகள் அல்லது சாலட்களில் கேரட் துருவல் மற்றும் தேன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
இப்படி பல விதங்களில் கேரட்டையும் தேனையும் நாம் ஒன்றாக சேர்த்து சாப்பிட முடியும். இது நமது உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதால், தினசரி இவ்வாறு சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து என்றும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.