விலங்குகள் ஏற்படுத்தும் ரேபிஸ் தொற்றின் பாதிப்புகள்!

செப்டம்பர் 28, உலக ரேபிஸ் தினம்
விலங்குகள் ஏற்படுத்தும் ரேபிஸ் தொற்றின் பாதிப்புகள்!
Published on

ந்தியாவில் தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அவை மனிதர்களைக் கடித்து, ரேபிஸ் எனப்படும் வெறி நாய்க்கடியை மனிதர்களுக்கு பரப்பி, நோய்களையும் மரணத்தையும் விளைவிக்கின்றன. ரேபிஸ் என்பது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு தீவிரமான தொற்று வைரஸ் நோயாகும். இது விலங்குகள் மற்றும் மனிதர்கள் என இரு சாராரையும் பாதிக்கும். ஆண்டுக்கு 50லிருந்து 60 ஆயிரம் மனிதர்கள் ரேபிஸால் இறப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இன்று (செப்டம்பர் 28ம் தேதி) உலக ரேபிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.

ரேபிஸ் தொற்றின் பாதிப்புகள்: ரேபிஸ் என்பது ராப்டோ வைரஸ் குடும்பத்தால் ஏற்படும் ஒரு கடுமையான வைரஸ் தொற்று ஆகும். ரேபிஸ் பாதிக்கப்பட்ட விலங்கு மற்றொரு விலங்கு அல்லது மனிதனை கடித்தால் அல்லது கீறினால் அதன் உமிழ்நீர் மூலம் இந்த நோய் பரவுகிறது. நோய் பாதிக்கப்பட்ட மனிதனின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் இதனால் பாதிக்கப்படுகிறது. படிப்படியாக சுவாச அமைப்பு, இரைப்பை, குடல் அமைப்பு மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. சுவாச அமைப்பின் செயல் இழப்பு காரணமாக மரணம் ஏற்படுகிறது.

ரேபிஸ் தொற்றின் அறிகுறிகள்: நாய்கள், வவ்வால்கள், ஓநாய்கள், நரிகள் குரங்குகள் ஆகியவை பொதுவாக வெறிநாய்க்கடியைப் பரப்புகின்றன. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், பூனைகள், பசுக்கள், ஆடுகள், குதிரைகள் போன்றவை பாதிக்கப்படலாம். ரேபிஸ் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகளாக காய்ச்சல், குமட்டல், தலைவலி, வாந்தி, கவலை, குழப்பம், தண்ணீர் அல்லது திரவங்களை விழுங்குவதில் சிரமம், அதிகப்படியான உமிழ்நீர் சுரத்தல், தூக்கமின்மை, உடல் செயல்பாடு முடக்கம் ஆகியவை காணப்படும்.

விலங்குகள் கடித்தால் உடனே செய்ய வேண்டியது என்ன?

மனிதர்களுக்கு ரேபிஸ் பரவுவதற்கு வீட்டு நாய்கள் 99 சதவீதம் பொறுப்பாகிறது. நாய், பூனை, குரங்கு போன்ற மிருகங்கள் கடித்தால் அல்லது ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக காயத்தை சுத்தம் செய்ய வேண்டும். மருத்துவரை நாடி, ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ரேபிஸ் நோய் சாதாரணமாக ஒரு மனிதனிலிருந்து இன்னொரு மனிதனுக்கு பரவாது. அரிதான சந்தர்ப்பங்களில் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களிடமிருந்து அல்லது பிரசவம் மூலம் தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவலாம்.

இதையும் படியுங்கள்:
World Rabies Day - வீட்டில் வளர்க்கும் நாய்க்கும் தடுப்பூசி போட வேண்டும்!
விலங்குகள் ஏற்படுத்தும் ரேபிஸ் தொற்றின் பாதிப்புகள்!

தடுப்பு முறைகள்: வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் ரேபிஸ் பரவுவதை தடுக்கலாம். மேலும், ரேபிஸ் பாதித்த விலங்குகளை தனிமைப்படுத்த வேண்டும். இதனால் பிற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ரேபிஸ் பரவும் அபாயம் குறையும்.

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு அவசியம் தடுப்பூசிகள் போட வேண்டும். அவற்றை வெளியே விடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தெரு நாய்கள் அவற்றை சமீபித்து அவற்றின் மூலம் ரேபிஸ் தொற்று பரவலாம். மேலும், செல்ல பிராணிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அடிக்கடி குளிப்பாட்ட வேண்டும். கால்நடை மருத்துவரிடம் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அனைத்து வகையான தடுப்பூசிகளையும் போட வேண்டும். அவற்றின் காயங்கள் மற்றும் தொற்று நோய்களை சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் உள்ளவர்களுக்கும் ரேபிஸ்க்கு எதிரான தடுப்பூசிகளை போட வேண்டும். வவ்வால்கள் அல்லது பிற விலங்குகள் வீட்டினுள் நுழையாதவாறு ஜன்னல்களை முடி வைக்கவும். செல்லப்பிராணிகளுக்கு உணவளித்த பிறகு கைகளை கழுவ வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com