எல்லா வகைப் பருவ காலங்களிலும் ஆரோக்கியமாகப் பாதுகாக்க வேண்டிய நம் உடல் உள்ளுறுப்புகளில் ஒன்று இதயம் ஆகும். இதய ஆரோக்கியத்துக்கு எந்தவித கோளாறுகளும் உண்டுபண்ணாமல் நல்ல ஊட்டச்சத்துக்களைக் அளிக்கக்கூடிய சிவப்பு நிறம் கொண்ட எட்டு வகை உணவுகள் உண்டு. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
சிவப்பு நிற பெல் பெப்பர்: இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இதயத்தின் செயல்பாடுகள் நல்ல முறையில் நடைபெறவும் மற்றும் மேலும் பல நன்மைகள் செய்யவும் உதவுகிறது.
பீட்ரூட்: இந்த வேர்க்காயில் நைட்ரேட்ஸ் சத்து அதிகம் உள்ளது. இவை இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. அதன் மூலம் விளையாட்டு வீரர்களின் திறனை அதிகரிக்கச் செய்கிறது.
தக்காளி: தக்காளியில் அதிகம் நிறைந்துள்ள லைக்கோபீன் (Lycopene) என்ற பொருள் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. லைக்கோபீன் இதயம் மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், சில வகை கேன்சர் நோய்களை வராமல் தடுக்கவும் உதவுகிறது. அத்துடன், மேலும் பல ஊட்டச் சத்துக்களின் உறைவிடமாகவும் திகழ்கிறது லைக்கோபீன் நிறைந்த தக்காளிப் பழம்.
ஸ்ட்ரா பெர்ரி: இனிப்புச் சுவை நிறைந்த இந்த ஜூஸி ஃபுரூட்டில் இதய ஆரோக்கியத்துக்குத் தேவையான பலவகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
டார்ட் செரி: இந்தப் பழத்தில் பாலிபினால்ஸ் மற்றும் வைட்டமின் C சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை இரத்த நாளங்களில் கோளாறுகள் வராமல் தடுக்கவும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் பெரிதும் உதவுகின்றன.
ஆப்பிள்: இந்தப் பழத்தில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அனைத்து வைட்டமின்களும், மினரல்களும் அதிகளவில் நிறைந்துள்ளன.
சிவப்பு நிற முட்டைகோஸ்: கிரஞ்சியான மொறு மொறுப்புத் தன்மை கொண்ட சிவப்பு முட்டைக்கோஸில் இதய ஆரோக்கியத்துக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
மாதுளை: இதயம் உள்பட உடலின் மொத்த ஆரோக்கியத்துக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த பழம் மாதுளை.
மேற்கூறிய சிவப்பு நிற உணவுப் பொருட்களில் ஒன்றிரண்டை தினசரி உணவுடன் தவறாமல் சேர்த்து உட்கொண்டு, உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யும் சத்துக்களைப் பெறுவோம்.