எமடோஃபோபியா காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை!

Emetophobia Cause and Treatment
Emetophobia Cause and Treatment
Published on

மடோஃபோபியா என்பது வாந்தி பற்றிய பயம். இந்த வகையான பயமுள்ளவர்கள் தாங்கள் வாந்தி எடுத்தாலும் அல்லது தன்னைச் சுற்றி இருப்பவர்கள் வாந்தி எடுப்பதைக் கண்டாலும் மிகவும் பயப்படுவார்கள். இந்த பயம் சில உணவுகள் அல்லது நடவடிக்கைகள் போன்ற வாந்தியை தூண்டக்கூடிய சூழ்நிலைகளைத் தவிர்க்க வழிவகுக்கும். எமடோஃபோபியா உள்ள நபர்கள் தங்கள் பயத்தை எதிர்கொள்ளும்பொழுது குமட்டல், வியர்வை, விரைவான இதயத்துடிப்பு போன்ற உடல் அறிகுறிகளை அனுபவிக்கலாம். இவை மரபணு காரணிகளால் ஏற்படலாம் அல்லது கடந்த காலத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களால் உண்டாகலாம். இது ஒருவகையான மனநோயாக கணக்கிடப்படுகிறது. ஆண்களை விட பெண்கள் எமடோஃபோபியாவால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

எமடோஃபோபியா கிரேக்க வார்த்தையான ‘எமின்’ என்பதிலிருந்து உருவானது. எமடோஃபோபியா பிரச்னை இருந்தால் வாந்தி எடுக்கும் பயம் இருக்கும். வாந்தி எடுப்பதை கண்டாலோ, அதன் வாசனை கூட பயத்தைத் தூண்டும். அதாவது, வாந்தி தொடர்பான எண்ணங்கள் பயத்தையும், பதற்றத்தையும் உண்டாக்குகின்றது.

அறிகுறிகள்: குமட்டல், வாந்தி எடுத்தல் போன்ற பயம் வாந்தி தொடர்பான கவலைகளுக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகள் வாந்தி எடுப்பதை பற்றிய கவலை, பயம் காரணமாக அன்றாட வாழ்க்கை முறையில் சில சிரமங்களை மேற்கொள்கிறார்கள்.

காரணங்கள்: இதற்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்தக் காரணமும் கிடையாது. குழந்தை பருவத்தில் இந்த பயம் உண்டாகி இருக்கலாம். பொதுவாக, பெரும்பாலான எமடோஃபோபிகள் வாந்தியுடன் தொடர்புடைய எதிர்மறையான குழந்தைப் பருவ அனுபவங்களிலிருந்து பெறுகிறார்கள். மரபணு காரணிகளாலும் இது ஏற்படலாம்.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு ஆதரவாகப் பெண்கள் செயல்பட வேண்டியதன் அவசியமும் வழிமுறைகளும்!
Emetophobia Cause and Treatment

நாள்பட்ட வயிறு தொடர்பான பிரச்னைகளால் விரக்தி அடைவதும், பயம் அல்லது அசௌகரியத்தை தூண்டுவதாலும் இது உண்டாகலாம். சில எமடோஃபோபிக்கள் வாந்தியை தூண்டக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் தவிர்க்கிறார்கள். உதாரணமாக, குடும்ப விழாக்கள், கம்பெனி கொண்டாட்டங்கள், பார்ட்டிகள் போன்றவற்றை தவிர்க்கிறார்கள். பார்ட்டிகளில் மது அருந்துபவர்கள் ஒருவேளை குடி போதையில் வாந்தி எடுத்தால் அதை பார்க்க வேண்டி இருக்குமே என்று பயப்பட்டு தவிர்க்கிறார்கள்.

சிகிச்சை: இம்மாதிரியான பயத்திற்கு வெளியில் சொல்லத் தயங்காமல் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. எமடோஃபோபியாவுக்கான சிகிச்சை தனி நபர்களுக்கு அவர்களின் பயமுறுத்தும் எண்ணங்கள் மற்றும் நடத்தைகளை சரி செய்யவும் மற்றும் மாற்றவும் உதவும் அறிவாற்றல் நடத்தை சிகிச்சையை உள்ளடக்கியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com