வளர்ச்சிதை மாற்றம், வளர்ச்சி மற்றும் ஆற்றல் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளில் தைராய்டு சுரப்பி முக்கிய பங்கு வகிக்கிறது. ஹைப்போ தைராய்டிசம் அல்லது ஹைப்பர் தைராய்டிசம் போன்ற தைராய்டு கோளாறுகள் உள்ள நபர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை முறையாக வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் பின்பற்றும் உணவுமுறை உங்களது தைராய்டு செயல்பாட்டில் தலையிடலாம். எனவே தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் சில உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
சிலுவை காய்கறிகள்: ப்ரோக்கோலி, காலிஃப்ளவர், முட்டைகோஸ் மற்றும் காலே உள்ளிட்ட சிலுவைக் காய்கறிகளில் Goitrogens கலவைகள் உள்ளன. இது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைக் குறைத்து, தைராய்டு ஹார்மோன் அதிகரிக்க வழி வகுக்கலாம்.
சோயா பொருட்கள்: சோயா பயன்படுத்தி செய்யப்படும் எல்லா தயாரிப்புகளிலும் ஐசோ பிளேவனாய்டுகள் உள்ளன. இது தைராய்டு ஹார்மோன் உறிஞ்சுதலில் தலையிடக்கூடும். ஹைபோ தைராய்டிசம் உள்ளவர்கள் சோயா தயாரிப்புகளை உட்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அவை தைராய்டு மருந்துகளை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கலாம்.
குலூட்டன்: சில ஆய்வுகளில் கொழகொழப்புத் தன்மை அதிகம் உள்ள உணவுகள் தைராய்டு பாதிப்பை அதிகமாக்கும் என கண்டறியப்பட்டுள்ளன. எனவே தைராய்டு கோளாறு உள்ள நபர்கள் பசையம் இல்லாத உணவை எடுத்துக் கொள்வது நல்லது.
அதிகப்படியான அயோடின்: அயோடின், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்தாகும். எனவே போதுமான அளவு அயோடின் உட்கொள்வது முக்கியமானது என்றாலும், அளவுக்கு மீறி அயோடின் எடுத்துக் கொண்டால் தைராய்டு கோளாறு உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். சில நேரங்களில் அதிக அயோடின் உட்கொள்ளல் ஹைப்பர் தைராய்டுசத்தைத் தூண்டி நிலைமையை மோசமாக்கலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: ஃபாஸ்ட் ஃபுட், சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகள் மற்றும் ப்ராசஸ்டு உணவுகள் அதிகம் பதப்படுத்தப்படுகின்றன. அவை குறைந்த ஊட்டச்சத்து மதிப்பை வழங்குவதால், எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். எனவே தைராய்டு கோளாறு உள்ளவர்கள், சரியான உணவை எடுத்துக்கொண்டு உடல் எடையை பராமரிக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், புரதம் மற்றும் முழு தானியங்களை சேர்த்துக் கொள்வதன் மூலமாக, தைராய்டை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
தைராய்டு கோளாறு என்பது உலக அளவில் அனைவருக்கும் ஒரே மாதிரி இல்லை என்றாலும், உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டியது தைராய்டு ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே தைராய்டு கோளாறு உள்ள நபர்கள், தனிப்பட்ட உணவுத் திட்டத்தைப் பின்பற்றி ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.