கண்ணோடு காண்பதெல்லாம்...?

Eye strain
Eye strain credits to smartbuyglasses
Published on

டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு பல ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதில் முக்கியமாக கண் எரிச்சல், கண் வலி, பார்வை குறைபாடு, தலைவலி, தூக்கமின்மை என அதிக பாதிப்புகள் கண்களுக்கே ஏற்படுகின்றன.

இது போன்ற பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாத்து, உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவதற்கான வழிகளை இங்கு பார்ப்போம்.

கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் இயற்கை பொருட்கள்:

ரோஸ் வாட்டர்

உங்கள் கண்களுக்கு குளிர்ச்சி அளிக்க ஆர்கானிக் ரோஸ் வாட்டரை நீங்கள் பயன்படுத்தலாம். இது உங்கள் கண் எரிச்சலை குணப்படுத்த உதவியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கேரட் + தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்? 
Eye strain

நெல்லிகாய் ஜூஸ்

உங்கள் கண் பார்வையை மேம்படுத்தவும், கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நீங்கள் நெல்லிகாய் ஜூஸ் குடிக்கலாம். கண்களைச் சுற்றி நெல்லிக்காய் எண்ணெயை கொண்டு மசாஜ்ம் செய்யலாம்.

கற்றாழை சாறு

குளிர்ந்த கற்றாழை சாற்றை பருத்தி உருண்டைகளின் உதவியுடன் கண்களில் தடவலாம். இது கண் அழுத்தத்தைக் குறைக்க உதவி செய்கிறது.

இதோடு கண்களுக்கு ஏற்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக கீரை உணவுகளை வாரம் இரண்டுமுறையாவது சாப்பிடுவது அவசியம்.

eye
eyecredits to sublime life

கண்களுக்கான தினசரி செயல்பாடு

கண்களை கழுவவும்

காலையில் தூங்கி எழுந்த உடன், உங்கள் கண்களைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் கண்களில் இருந்து அழுக்குகள் நீங்கிவிடும்.

உடற்பயிற்சி

சூரிய நமஸ்காரம், பிராணாயாமம் போன்ற எளிதான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இது உங்கள் கண்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு கண் சோர்வையும் குறைத்து விடும்.

தலை மசாஜ்

தலை மசாஜ் செய்வது உங்கள் கண்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் தலையை தவறாமல் மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம் மற்றும் கண் அழுத்தத்திலிருந்து நிவாரணமும் பெறலாம்.

இவ்வாறு கண்களை நீங்கள் ஆரோக்கியமாக பார்த்துக்கொண்டால், டிஜிட்டல் தாக்கத்தில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க முடியும்.   

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com