காய்ச்சலை தணிக்கும் கண்கண்ட கைமருந்துகள்!

Fever baby
Fever babyhttps://tamil.webdunia.com

காய்ச்சலில் பல வகை உண்டு. அவை உட்காய்ச்சல், எலும்புக் காய்ச்சல், குளிர் காய்ச்சல், சன்னி, பாதக் காய்ச்சல், தாக காய்ச்சல், பித்தக் காய்ச்சல், முறை காய்ச்சல் என்று பல்வேறு வகையான காய்ச்சல் வகைகள் உண்டு. அதற்கு எளிமையான மருத்துவ குறிப்புகளை இப்பதிவில் காண்போம்.

மலேரியா காய்ச்சல்: எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். சிறியாநங்கை செடியின் வேர், கண்டங்கத்திரி வேர் சுத்தம் செய்து நசித்து கசாயம் தயாரித்து காலை மாலை 3 நாட்கள் பருக வேண்டும். மிளகு, சீரக பொடி சம அளவு கலந்து சோற்றில் பிசைந்து மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும்.

முறைக்காய்ச்சல் (டைபாய்டு): சந்தனத்தூள் 20 கிராம் எடுத்து 300 மில்லி நீரில் போட்டு காய்ச்சி 150 மில்லியாக்கி வடிகட்டி மூன்று வேளையாக அம்பது மில்லி கொடுத்து வர காய்ச்சல் சரியாகும். வேலிப்பருத்தி இலை சாறு 30 மில்லியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலையில் மாத்திரம் மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். புன்னைமரப் பூக்களை உலர்த்தி தூளாக்கி சலித்து ஒரு சிட்டிகை காலை, மாலை தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். பவளமல்லி மரிக்கொழுந்து இலைகள் நசுக்கி சாறெடுத்து அதனுடன் இஞ்சி சாறு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். அதுபோல் இந்த மருந்தை சாப்பிடும் நாட்களில் பால், மோர் சாதம், அரிசி கஞ்சி சாதம் மாத்திரம்தான் சாப்பிட வேண்டும். கல்லத்தி மரப்பட்டையை சிதைத்து நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை பருக முறைக்காய்ச்சல் தீர்ந்து உடல் பலம் மிகும்.

டெங்கு காய்ச்சல்: பப்பாளி இலையை நறுக்கி போட்டு மிக்சியில் அடித்து தண்ணீர் கலக்காமல் அந்த சாற்றினை இரண்டு ஸ்பூன் குடிக்க வேண்டும்.

சாதா காய்ச்சல்: துளசி வேரை நீரில் இட்டு காய்ச்சி தினமும் நாலு வேளை குடித்து வர காய்ச்சல் தீரும். அரச மரத்தின் கொழுந்து இலையை குடிநீராக்கி குடிக்க தாக ஜுரம் தணியும். பாலை மரப்பட்டையை 50 கிராம் நன்கு நசுக்கி அரை லிட்டர் நீரில் இட்டு கால் லிட்டராக கொதிக்க வைத்து வடிகட்டி 25 மில்லி முதல் 50 மில்லி வரை காலை, மாலை கொடுத்து வரக் காய்ச்சல் குணமாகும். சீந்தில் கொடியுடன் கொத்தமல்லி, அதிமதுரம், சோம்பு ,ரோஜாப் பூ இவற்றை சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு, ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி 100 மில்லி வீதம் காலை, மதியம், மாலை கொடுத்து வர காய்ச்சல் சரியாகும்.

கோரைக்கிழங்கை நசுக்கி நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை மூன்று நாட்கள் பருக நல்ல குணம் தெரியும். நசித்த வில்வ இலைகளுடன் சுக்கு, மிளகு, சீரகம் அனைத்தையும் போட்டு காய்ச்சி வடிகட்டி வேலைக்கு 50 மில்லி கசாயத்தை 3 நாட்கள் பருக நல்ல குணமடைவதை காண முடியும்.

இதையும் படியுங்கள்:
அடுத்த மனிதரில் உங்களைத் தேடாதீர்கள்!
Fever baby

சன்னி: வன்னி மரத்தில் எல்லா பாகங்களிலும் இலை ,பூ, காய், பட்டை, வேர் என்று எல்லா பாகத்திலும் சிறிதளவு சமமாக எடுத்து நன்கு அரைத்து அதில் நெல்லிக்காய் அளவு எடுத்து 100 மில்லி பாலில் கலக்கி வடிகட்டி காலையில் மட்டும் சாப்பிட்டு வர சன்னி தோஷம் தீரும். நொச்சி இலையை தலையணையாகப் பயன்படுத்தி வர சன்னி குணம் அடையும். வேப்ப எண்ணையை பூசி வர சன்னி குணமாகும்.

உட்காய்ச்சல்: தென்னம்பூ ஒரு பிடியை வாயிலிட்டு மென்று தின்று வர உட்காய்ச்சல்  குணமாகும்.

குளிர் மற்றும் எலும்பு காய்ச்சல்: கடம்பம் பட்டை 50 கிராமை இடித்து ஒரு லிட்டர் நீரிலிட்டு கால் லிட்டராக காய்ச்சி காலை மாலை 25 மில்லி குடித்து வர எலும்புக் காய்ச்சல், குளிர் காய்ச்சல் குணமாகும். செண்பகப் பூவை காய்ச்சி அந்த நீரை குடித்து வர குளிர் காய்ச்சல் நீங்கும்.

பித்த காய்ச்சல்: இலுப்பைப் பூ கைப்பிடி எடுத்து அரை லிட்டர் நீரிலிட்டு 200 மில்லியாக காய்ச்சி வடிகட்டி 50 மில்லி அளவில் ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்து வர பித்தக் காய்ச்சல் நீங்கும்.

இதுபோன்ற மருத்துவ முறைகளை தெரிந்து வைத்துக்கொண்டால் தேவையான பொழுது அருகில் இருக்கும் சித்த வைத்தியரின் ஆலோசனை பெற்று சாப்பிட்டு குணம் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com