சரும ஆரோக்கியம் காக்கும் பீச் பழம் பற்றிய உண்மைகள்!

Facts about peaches for skin health
Facts about peaches for skin healthhttps://pixabay.com

குங்குமப்பூ மற்றும் மஞ்சள் நிறம் கலந்த பீச் பழங்களின் பூர்வீகம் சீனா. பீச் பழ சாகுபடி 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று சமீபத்திய தொல்பொருள் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. சீனாவிலிருந்து, பீச் பெர்சியாவிற்குச் சென்றது, அங்கிருந்து கிரேக்கம் மற்றும் ரோமானியர்களை அடைவதற்கு முன்பு அது தனது அறிவியல் பெயராக, ‘ப்ரூனஸ் பெர்சிகா’ எனப் பெற்றது. பிறகு அதன் சாகுபடி உலகெங்கும் பரவியது.

குளிர் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் இது பயிரிடப்படுகிறது.என்றாலும், இது கோடைக்கால பழங்களில் ஒன்று. பீச் பழங்களை, ‘ஸ்டோன் பழங்கள்’ என அழைக்கின்றனர். பேரிக்காய், ஆப்பிள், பாதாம், பிளம் போன்ற ரோசேசியின் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த பீச் ஒரு கல் பழம். இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது! இது ஒரு சீசன் பழம்.

ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஒரு புரோட்டீன். இதன் செயல்பாடு ஆக்ஸிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்வதாகும். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், உடல் செயல்பாடுகள் மோசமாக பாதிக்கப்படும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க சில பழ வகைகளை மட்டும் நீங்கள் எடுத்துக் கொண்டால் போதுமானது. அந்தப் பழங்களில் ஒன்று பீச். இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளன. எனவே, இரும்புச்சத்து குறைபாடு அல்லது உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் தினமும் ஒரு பீச் பழத்தை உட்கொண்டு வந்தால் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.

கோடையில் வெளியில் சென்று களைப்புடன் வந்தால் பீச் பழத்தினை சாப்பிடலாம். ஏனெனில் இதில் நீர்சத்து அதிகம் கொண்ட பீட்டா கரோட்டின் இருப்பதால் உடல் வறட்சியை இது போக்குகிறது. பீச் பழத்தில் உள்ள அதிகப்படியான பீட்டா கரோட்டின் உங்களது கண் பார்வயை அதிகரிக்க உதவுகிறது. காரணம் அது கண்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். பீச் பழத்தில் உள்ள லைகோபின் மற்றும் லூடீன் சத்துக்கள் புற்றுநோய் மற்றும் மாகுலர் டிஜெனரேஷன் எனும் கண் பார்வை குறைபாடுகளையும் சரிசெய்யும்.

பீச் பழத்தில் வைட்டமின் ஏ, சி அதிகமுள்ளதால் இந்தப் பழத்தை வைத்து ஃபேசியல் செய்தால் சரும சுருக்கங்கள் நீங்குவதோடு, சரும துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சுத்தமாகவும் முகம் பொலிவுடனும் இருக்கும். கரும்புள்ளிகள் மற்றும் முகத்தில் சுருக்கத்தையும் வராமல் தடுக்கும். பீச் பழத்துடன் தக்காளி, எலுமிச்சை மற்றும் முட்டையின் வெள்ளை கரு என ஏதாவது ஒன்றை சேர்த்து முகத்திற்கு ஃபேசியல் போட்டால் முகத்திற்கு பொலிவு கூடி கலர் மாற்றங்கள் ஏற்படும்.

எடையை குறைக்க விரும்பும் நபர்கள் தாராளமாக பீச் பழங்கள் சாப்பிடலாம். காரணம், ஒரு பழத்தில் சராசரியாக 60 கலோரிகள் மட்டுமே உள்ளது. கொழுப்பு எதுவும் கிடையாது. இப்பழத்தில் உள்ள பாலிபினால்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடை இழப்பிற்கு உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தவிர்த்து, செரிமான பிரச்னைகளை தவிர்க்கிறது. கொலஸ்டிராலை குறைக்க உதவுகிறது.

பீச் பழத்தில் வைட்டமின் ஏ, சி, இ மற்றும் கே உள்ளது அதோடு கால்சியம், காப்பர், துத்தநாகம், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தனிமங்ககளும் உள்ளன. இதில் ‘குளோரோஜெனிக்’ எனும் விசேஷ அமிலம் உள்ளது. இது நமது உடலில் ஆன்டி இம்பிளமெட்ரியாக செயல்படுகிறது. பொதுவாக, பீச் பழங்கள் முடி உதிர்வதை கட்டுப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் எந்த வயது வரை நம்மோடு தூங்கலாம்?
Facts about peaches for skin health

பொட்டாசியம், இரும்பு போன்ற சத்துக்கள் இதில் அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மன அழுத்தம், மனநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை மீட்க பீச் பழங்கள் உதவுகின்றன. இரவில் படுக்கும்போது தோலுடன் இந்தப் பழத்தை சாப்பிட்டு வந்தால் அமைதியான தூக்கம் கிடைக்கும். மார்பு சளி, வறட்டு இருமல், தொண்டை புண் ஆகியவற்றை குணப்படுத்த பீச் பழம் பயன்படுகிறது.

பீச் பழத்தில் ஆன்டி கார்ஜினோஜெனிக் ஒவ்வாமை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, நுண்ணுயிரி எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் புற்றுநோயை தவிர்க்க உதவுகிறது.

பீச் பழங்கள் சாப்பிடுவது கருவில் உள்ள குழந்தைக்கு நரம்புக் குழாய் தொடர்பான குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவும். பீச் பழத்தில் வைட்டமின் பி6 கொண்டிருப்பதால் கர்ப்பிணிகள் சாப்பிடவேண்டிய பழங்களில் ஒன்றாக உள்ளது. மன அழுத்தம், மன நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை மீட்க பீச் பழங்கள் உதவுகின்றது. பீச் பழங்களை உட்கொள்வதால் நரம்பு மண்டலம் மூலமாக நரம்பின் செல்களை பாதுகாக்கிறது. மேலும், சிறுநீரகத்தில் உருவாகும் கல் மற்றும் கட்டிகளை பீச் பழம் சாப்பிடுவதால் தடுக்க முடியும். இது மலமிளக்கியாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரகப்பையில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.

பீச் பழங்கள் தொற்று நோய்கள், இதய நோய்கள் ஆகியவற்றை குணபடுத்தி இரத்த ஓட்டத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுபாட்டுக்குள் வைக்கிறது. கீழ்வாதம், ரூமட்டிக் நோயால் அவதிபடுகின்றவர்கள் பீச் பழத்தின் மூலம் தீர்வு காண முடியும். வலிப்போடு கூடிய இருமல் இருப்பவர்களுக்கு பீச் பழத்தில் தேநீர் தயாரித்து பயன்படுத்துகையில் அதிக செயல் திறன் மிக்கதாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com