கொழுப்பு கல்லீரல் பிரச்சனை... மதுப்பழக்கம் இல்லை என்றாலும் வருமா? 

Fatty Liver Problem
Fatty Liver Problem
Published on

கல்லீரல் நம் உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று. இது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்குதல் போன்ற முக்கியமான செயல்களை செய்கிறது. கொழுப்பு கல்லீரல் பிரச்சனை என்பது கல்லீரலில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து விடுவதால் ஏற்படும் ஒரு நோய். மதுப்பழக்கம் இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் மது அருந்தாதவர்களுக்கும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை ஏற்படலாம் என்பது பலருக்குத் தெரிவதில்லை. 

மது அருந்தாதவர்களுக்கு கொழுப்பு கல்லீரல் பிரச்சினை ஏற்படுவதற்கான காரணங்கள்: 

உடற்பருமன், கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும். உடலில் அதிகமாக கொழுப்பு சேரும்போது அதில் ஒரு பகுதி கல்லீரலில் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து கல்லீரல் கொழுப்பு பிரச்சனையை ஏற்படுத்தும். 

உடலில் போதிய அளவு இன்சுலின் உற்பத்தியாகாத போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால், கொழுப்பு கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு மரபணு ரீதியாகவே இந்தப் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது. பாலினம் சார்ந்தும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை ஏற்படலாம். இதில், பெண்களை விட ஆண்களுக்கே இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. 

சில குறிப்பிட்ட மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது கொழுப்பு கல்லீரலை ஏற்படுத்தும். உதாரணமாக ஸ்டெராய்டுகள், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகள் போன்றவை கல்லீரலை நேரடியாக பாதிக்கும் தன்மை கொண்டவை. எனவே, இவற்றை எடுத்துக்கொள்ளும்போது தகுந்த மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. 

இதையும் படியுங்கள்:
இந்த 6 குறைந்த கலோரி தின்பண்டங்களைச் சாப்பிட்டால், உங்கள் உடலில் உள்ள கொழுப்பு காணாமல் போகும்! 
Fatty Liver Problem

கொழுப்பு கல்லீரல் நோயைக் கண்டறிய மருத்துவர்கள் உடல் பரிசோதனை செய்து, ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்றவற்றை செய்வார்கள். கொழுப்பு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன் அது எதனால் ஏற்பட்டது என்ற காரணத்தை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது முக்கியம். உதாரணமாக உடற்பருமனால் ஒருவருக்கு இந்த பிரச்சனை இருந்தால், உடல் எடையைக் குறைத்தால், இந்த பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கலாம். 

இதன் மூலமாக, மது அருந்துபவர்களுக்கு மட்டும்தான் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை வரும் என நாம் உறுதியாக சொல்ல முடியாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.‌ எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் எந்த விதமான நோய்களிலிருந்தும் நாம் பாதுகாப்புடன் இருக்க முடியும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com